இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:53 PM (IST) Jan 13
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கானா வினோத்திற்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
12:50 PM (IST) Jan 13
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் காதலியை பார்க்க வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஆதி, மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் காதலிக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12:42 PM (IST) Jan 13
9 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் நலன் குமாரசாமி 'வா வாத்தியார்' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், நலனின் வழக்கமான பாணியிலிருந்து மாறி ஒரு கமர்ஷியல் மசாலா படமாக உருவாகியுள்ளது.
12:40 PM (IST) Jan 13
இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12:14 PM (IST) Jan 13
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள தி ராஜா சாப் திரைப்படம் மூன்று நாட்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
12:09 PM (IST) Jan 13
பாலாற்றில் ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளைகளால் நிலத்தடி நீர் மாசுபாடும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் மணல் குவாரிகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
12:04 PM (IST) Jan 13
Sun Transit 2026: ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதுவே மகர சங்கராந்தி எனப்படுகிறது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்க்கலாம்.
11:41 AM (IST) Jan 13
விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான “அய்யனார் துணை”யில் நடிக்கும் நடிகர் சல்மான் மற்றும் நடிகை ஆயிஷா ஆகியோருக்கு நிஜ வாழ்க்கையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
11:37 AM (IST) Jan 13
அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் மற்றும் சேரன் இருவரும் தங்கள் காதலிகள் உடன் ரொமான்ஸ் செய்வதை பார்த்து ஷாக் ஆகிறார் சோழன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
11:28 AM (IST) Jan 13
திமுக ஏன் இன்னும் பிரச்சாரத்துக்கு போகாமல் இருக்கிறது என்கிற கேள்வி அனைத்து மட்டத்திலும் எழுந்திருக்கிறது. மற்ற கட்சிகளை விட கண்ணுக்கு தெரியாத பவர்ஃபுல்லான ஒரு சில பிரச்சாரங்களை திமுக செய்து கொண்டு இருக்கிறது.
11:24 AM (IST) Jan 13
தொகுப்பாளினி மணிமேகலையின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
11:22 AM (IST) Jan 13
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), பிரீமியம் செலுத்தத் தவறியதால் லேப்ஸ் ஆன பாலிசிகளை மீண்டும் செயல்படுத்த ஒரு சிறப்பு புத்துயிர் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
11:02 AM (IST) Jan 13
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு தனிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படக்குழு தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வருகின்ற 15ம் தேதி விசாரிக்க உள்ளது.
11:00 AM (IST) Jan 13
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 84 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த இமாலய வசூல் சிரஞ்சீவியின் பாக்ஸ் ஆபீஸ் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
10:38 AM (IST) Jan 13
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள பராசக்தி திரைப்படம் மூன்றாம் நாள் வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இங்கே காணலாம்.
10:37 AM (IST) Jan 13
Rahu Transit 2026 : ஜோதிடத்தின்படி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு புதன் மற்றும் ராகுவின் அரிய சேர்க்கை நிகழ உள்ளது. இது மூன்று ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொண்டு வர உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
10:29 AM (IST) Jan 13
கியா இந்தியா இந்திய சாலைகளில் 5,00,000 கனெக்டட் கார்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கனெக்டட் வேரியண்ட்கள் விற்பனையில் 40% பங்குடன் முன்னிலை வகிக்கின்றன.
10:20 AM (IST) Jan 13
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட 6 மணி நேர விசாரணை நேற்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.
10:17 AM (IST) Jan 13
தங்கம் மற்றும் வெள்ளியில் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவாக, ஜனவரி 13 அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360 ஆகவும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
10:04 AM (IST) Jan 13
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் குடும்பம் பாண்டியன் குடும்பத்தின் மீது போலி நகை புகார் அளிக்கிறது. காவல் நிலையத்தில் பாக்கியம் அபாண்டமாக பழி சுமத்த, மீனா ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை உடைத்து, வழக்கின் போக்கையே மாற்றுகிறார்.
09:51 AM (IST) Jan 13
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
09:35 AM (IST) Jan 13
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஆதி குணசேகரன் தற்போது சரண்டர் ஆகும் முடிவுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:22 AM (IST) Jan 13
இந்திய ரயில்வே, ஜனவரி 12, 2026 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை போலி கணக்குகள் மற்றும் முகவர்களின் தலையீட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
09:07 AM (IST) Jan 13
தமிழகத்தில் ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை.
09:05 AM (IST) Jan 13
மாருதி சுசுகி ஈக்கோ வேன், குறைந்த விலை, குடும்பம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு போன்ற காரணங்களால் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகத் திகழ்கிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
08:44 AM (IST) Jan 13
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு அடைக்கலம் கொடுத்துள்ள சிந்தாமணி, அவரை வைத்து விஜயாவின் வீட்டை எழுதி வாங்க திட்டமிட்டு இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:26 AM (IST) Jan 13
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ள நிலையில், புதுவையின் காலைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.