Classic 350 ரசிகர்களே… 2026 மாடல் வந்தாச்சு! இனி பயணத்தில் டென்ஷன் இல்லை
ராயல் என்ஃபீல்டின் 2026 கிளாசிக் 350 பாபர் மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 2026
ராயல் என்ஃபீல்டின் ஐகானிக் கிளாசிக் 350 வரிசையில் 2026 மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. பாபர் ஸ்டைல் லுக், கிளாசிக் ரெட்ரோ உணர்வு ஆகியவற்றை அப்படியே வைத்துக்கொண்ட இந்த புதிய பதிப்பு, தினசரி ஆப்ஸ் இன்னும் வசதியாக்கும் சில முக்கிய அப்டேட்களுடன் ஷோரூம்களுக்கு வந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
2026 கிளாசிக் 350-ல் குறிப்பிடத்தக்க மெக்கானிக்கல் மாற்றமாக ‘அசிஸ்ட்-ஸ்லிப்பர் கிளட்ச்’ இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கிளட்ச் அழுத்தம் மிக இலகுவாகி, நகர போக்குவரத்தில் அடிக்கடி கிளட்ச் பயன்படுத்தும்போது கைகள் சோர்வடைவது குறையும். மேலும், உயர்ந்த வேகத்தில் கியர் மாற்றும் தருணங்களில் பின் சக்கரம் சறுக்கும் வாய்ப்பையும் குறைக்கிறது. கூடுதலாக, இப்போது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்
டிசைன் பக்கத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. சிங்கிள் சீட் பாபர் அமைப்பு, வைட்வால் டயர்கள், அலுமினியம் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள், உயரமான ஹேண்டில்பார் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. கஸ்டம்-பில்ட் தோற்றம் தரும் சைலன்சர் மற்றும் ஃபெண்டர்கள் இதன் ஸ்டைலுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. ஜாவா 42 பாபர், பெராக், ஹோண்டா CB350, ஹார்லி X440 போன்ற மாடல்களுடன் போட்டியிடும் வகையில் இது நிற்கிறது.
இந்தியாவில் கிளாசிக் 350 விலை
பைக்கில் 349cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தொடர்கிறது. இது 20.2 bhp பவர், 27 Nm டார்க் உருவாக்கி 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறங்களைப் பொறுத்து விலை மாறுபடும் நிலையில், ஷேக் பிளாக்/பர்பிள் ஹேஸ் ரூ.2.19 லட்சம்; ட்ரிப் டீல் கிரீன்/ரெவ் ரெட் ரூ.2.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

