- Home
- Business
- ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. நாளை முதல் அமல்!
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. நாளை முதல் அமல்!
அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் RailOne (ரயில் ஒன்) செயலியை ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் என அனைத்து டிக்கெட்டுகளையும் எடுக்கலாம்.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பு
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அதுவும் Unreserved எனப்படும் முன்பதிவில்லாத பெட்டிகளில் தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் பயணம் செய்கின்றனர்.
Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி
இந்த நிலையில், Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி அறிவித்து இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சலுகை நாளை (ஜனவரி 14) முதல் அமலுக்கு வருகிறது.
அதாவது ரயில்வே கொண்டு வந்துள்ள RailOne (ரயில் ஒன்) செயலி மூலம் Unreserved டிக்கெட்டுகளை புக் செய்பவர்கள் 3% தள்ளுபடி (RailOne app discount) பெறலாம்.
ரயில் ஒன் செயலியில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை எடுக்க UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என பல வசதிகள் உள்ளன.
3% கேஷ்பேக் + தள்ளுபடி
இந்த டிக்கெட் தள்ளுபடி நாளை முதல் ஜூலை 14ம் தேதி வரை என அமலில் இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரயில்வே வாலட் (R-Wallet) மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும். இப்போது 3% தள்ளுபடி அறிவித்து இருப்பதன் மூலம் ரயில்வே வாலட் மூலம் பணம் செலுத்தினால் இரண்டு சலுகைகளையும் பெற முடியும்.
ரயில் ஒன் செயலி
Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி என்பது ரயில் ஒன் செயலி வாயிலாக மட்டுமே கிடைக்கும். டிக்கெட் கவுண்ட்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுக்கும்போது இந்த சலுகை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ரயிலின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் RailOne (ரயில் ஒன்) செயலியை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் என அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் எடுக்க முடியும்.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
மேலும் நீங்கள் புக் செய்த டிக்கெட் PNR நிலை, நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளின் நிலை (Coach Position), உங்கள் ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது (Spot Your Train) போன்ற வசதிகளையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸியும் புக் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சென்று RailOne என குறிப்பிட்டு இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆப்பிள் ஸ்டோரிலும் (Apple App Store) ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

