- Home
- Spiritual
- தீராத நிலப் பிரச்சனையா? வீடு கிடைக்கவில்லையா? இவரை ஒருமுறை தரிசித்தால் நடக்கும் அதிசயம்
தீராத நிலப் பிரச்சனையா? வீடு கிடைக்கவில்லையா? இவரை ஒருமுறை தரிசித்தால் நடக்கும் அதிசயம்
Pudukottai Sevalur Bhoominathar Temple : உங்கள் நிலத்தில் சிக்கலா அல்லது சொந்த வீடு அமையவில்லையா? நிலம் மற்றும் சொத்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த சிவன் கோயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bhuminathar Temple
Pudukottai Sevalur Bhoominathar Temple : வீடு வாங்குவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கும் நிலம் வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கும் நிலம் பட்ட முடிப்பதில் பிரச்சனை இருப்பவர்களுக்கும் வழிபட வேண்டிய தளம் அற்புதமும் ஆச்சரியமும் நிறைந்த சிவலிங்கம் எங்கு உள்ளது எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்று விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செவலூர் சிவலிங்கம் பூமிநாதர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான, தனித்துவமான சிவலிங்கமாகும்; இது பல பட்டைகளைக் கொண்டது, பூமாதேவி ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு காப்புகள் சார்த்தி வழிபட்டதால் இந்தப் பட்டைகள் உருவானதாகக் கூறப்படுகிறது, மேலும் இது வாஸ்து தலமாகவும், இந்திய தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட சின்னமாக உள்ளது. இந்த லிங்கத்தின் தனித்துவமான அம்சம், அபிஷேக நீர் லிங்கத்திற்கும் ஆவுடைக்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக பூமிக்குள் சென்றுவிடுகிறது.
Pudukottai Sevalur Bhoominathar Temple to Resolve Land and Property Disputes
சிறப்பு வழிபாடு: பூமிநாதர் கோயிலில் வாஸ்து நாள்களில் விசேஷ பூஜை நடக்கும். லிங்கத்திற்கு மஞ்சள் காப்பு சந்தனகாப்பு கஸ்தூரி காப்பு மூலிகை காப்பிய பலவித காப்புகளை சாத்தியதால் பல பட்டைகளைக் கொண்டதாக காட்சி தருகிறார் மகாவிஷ்ணுவால் இந்த கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.
செங்கல் வழிபாடு: கோயிலில் நீண்ட நாளாக மனதில் நினைத்திருக்கும் விஷயங்களையும் வீடு கட்ட முடியாமல் போகும் கிடைக்கும் வீட்டு பத்திரம் முடிவு வருவதற்கும் இங்கு மெசேஜ பூஜை நடத்தப்படும் அதற்கு செங்கல்கள் வாங்கி வைத்தால் நம் வீட்டிற்கு செங்கல் வைத்து கட்டுவோம் என்று ஒரு நம்பிக்கையும் இந்த கோயிலுக்கு உண்டு ஆகையால் பக்தர்கள் அனைவரும் இந்த கோயிலுக்கு செங்கலுடனே வருவார்கள் வந்து கோயிலில் செங்கலை வைத்துவிட்டு சென்றாள். சில நாட்களுக்குள்ளேயே நம் வீடு கட்டி விடலாம் நம்பிக்கையும் உள்ளது. செங்கல் வைத்து வழிபடுவார்கள்.
Pudukottai Sevalur Bhoominathar Temple
கோயிலின் அமைப்பு: கருவறையில் லிங்கமூர்த்தியாகக் காணப்படும் மூலவர், 16 பட்டைகளை உடைய பாணலிங்கமாகும். இக்கோயிலின் பழைய மூலவர் சிதிலமடைந்ததின் காரணமாக அதை எடுத்து வைத்துவிட்டு புதிதாக லிங்கம் செய்து வைக்கப்பட்டு தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது. ஆவுடையார் வட்டவடிவமுள்ளது. சுவாமி கோயிலுக்கு வடகிழக்கில் பைரவருக்குத் தனிக்கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுவாமி கோயில் வசந்த மண்டபத்தில் நந்தியும், நந்திக்கு அடுத்து பலிபீடமும் உள்ளது. பின்புறத்தில் தென்மேற்கு மூலையில் மூலப்பிள்ளையார் கோயில் உள்ளார். கோயிலின் காலத்திற்கு முற்பட்டவராக கட்டப்பட்ட ஒரு கோயில். மிகவும் பழமையான கோயில் என்று கூறப்படுகிறது