Asianet News TamilAsianet News Tamil

ஜிபி முத்து செய்த மாஸ் சம்பவம்... ‘தலைவரே’ என கொண்டாடும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் வீட்டில் அப்படி என்ன நடந்தது?

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜிபி முத்துவை தலைவரே... தலைவரே என அழைக்கும்படியான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

First Published Oct 17, 2022, 3:28 PM IST | Last Updated Oct 17, 2022, 3:30 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் தான் ரியல் போட்டியே ஆரம்பமாகி உள்ளது. நாமினேஷன், எவிக்‌ஷன், கேப்டன்சி என ஏகப்பட்ட டாஸ்க்குகளும் போட்டியாளர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அதன்படி இன்று நடக்கும் கேப்டன்சி டாஸ்க்கில் ஜிபி முத்து மற்றும் ஜனனி இடையே கடும் போட்டி நிலவி வருவதை ஏற்கனவே முந்தைய புரோமோவில் பார்த்தோம்.

தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜிபி முத்துவை தலைவரே.... தலைவரே என அழைத்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் அவர் கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெற்றுவிட்டார் போல தெரிகிறது. அதனால் அவரை கேப்டன் என்று அழைப்பதற்கு பதிலாக தலைவரே என அழைத்து வருகிறார்கள் போல் இருக்கிறது.

இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வாகி உள்ளார். இதற்காக நடந்த டாஸ்கில் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணான ஜனனிக்கு செம்ம டஃப் கொடுத்து அவர் வெற்றிவாகை சூடி உள்ளார். ஜிபி முத்து கேப்டன் ஆனதால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கேப்டனாக விரும்பிய ஜிபி முத்து... டஃப் ஆன டாஸ்க்கை கொடுத்து கதறவிட்ட பிக்பாஸ் - வைரல் புரோமோ