இஸ்ரோவின் புதிய பாடல்: விண்வெளி ஆராய்ச்சியின் கனவுகளைத் தூண்டும் இசை வெளியீடு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடலை வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல், இந்தியாவின் விண்வெளிச் சாதனைகளைப் புகழ்ந்துரைக்கிறது. இப்பாடல் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் கனவுகளைத் தூண்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தை கொண்டாடுவதற்கு இஸ்ரோ ஒரு சிறப்பு பாடலை பா மியூசிக் தளத்தில் வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் இப்பாடலை ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து, தீபக் ப்ளூ குரல்கொடுத்து பாடிய இந்த பாடலின் தயாரிப்பை மதுரை குயின் மீரா பள்ளியின் மாணவன் அபிநாத் சந்திரன் மேற்கொண்டுள்ளார்.