Asianet Tamil News Live: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது - இபிஎஸ்

Tamil News live updates today on november 30 2022

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்தில் போய் சீர்கெட்டு விட்டது. திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் கொந்தளித்து வயிறு எரிகின்றனர். மக்களை பாதுகாப்பதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

2:33 PM IST

தோல்விக்கு பின்னும் தொடரும் லைகர் பட பஞ்சாயத்து... அமலாக்கத்துறை விசாரணைக்கு விஜய் தேவரகொண்டா ஆஜர்

ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். லைகர் படம் படுதோல்வி அடைந்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்திற்காக ஹவாலா பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:05 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை இல்லையா..? தமிழக அரசை விளாசும் ராமதாஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

1:42 PM IST

டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர், திருவுருவச்சிலை..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார்  திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம் என்றும் அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 
11:52 AM IST

பிரபாஸ் உடன் காதலா..? உண்மையை மறைக்க மனமின்றி ஓப்பனாக போட்டுடைத்த பாலிவுட் நடிகை

பிரபாஸ், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபாஸ் புரபோஸ் பண்ணியதாகவும், இதனையடுத்து பிரபாஸின் காதலை ஏற்றுக்கொண்ட கீர்த்தி சனோன் அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் உலா வந்தன. மேலும் படிக்க

11:36 AM IST

புல் மப்பில் ரேபிடோ பைக்கை புக் செய்த இளம்பெண்.. நடுவழியில் வைத்து நாசம் செய்த காமக் கொடூரன்கள்..!

பெங்களூருவில் ராபிடோ பைக்கை புக் செய்து பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிங்க

11:35 AM IST

ஏழை மக்கள் பசியாறுவதை தடுக்க நினைத்தால்.. அதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.. திமுகவை எச்சரிக்கும் டிடிவி

ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது.

மேலும் படிங்க

11:05 AM IST

இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை!

மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மேட்டுபாளையம் -  கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாளும் இயக்கப்படும் தினசரி  சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 

10:28 AM IST

மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மலர்தூவி அஞ்சலி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

10:22 AM IST

சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு, அவருடன் செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி உள்ளனர். இதுகுறித்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர், ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் படிக்க

9:42 AM IST

பட புரமோஷனுக்கு வரமாட்டேன்னு அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா! தெருதெருவாக போஸ்டர் ஒட்டி அசத்தல்

புரமோஷனுக்கு வர மறுக்கும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில், இளம் ஹீரோயின் ஒருவர் தான் நடித்த படத்தை புரமோட் செய்வதற்காக தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டி உள்ளார்.  மேலும் படிக்க

9:30 AM IST

நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு..! குஷ்பு, நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்

 பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரிடம் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதனையடுத்து முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க..

9:08 AM IST

திடீர் மாரடைப்பு? வாக்கிங் சென்ற போது மணக்குள விநாயகர் கோவில் யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி(32) நடை பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:08 AM IST

சென்னை - கோவை இடையே 6 சிறப்பு ரயில்கள் ரத்து... விவரம் இதோ

* சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 1, 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1, 2, 3ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து. 

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை  எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை- எம்.ஜி.ஆர். சென்டிரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது 

8:56 AM IST

விஜய் முதல் நெப்போலியன் வரை... நடிப்பை தாண்டி தொழில்கள் மூலம் கோடி கோடியாய் கல்லாகட்டும் சினிமா நட்சத்திரங்கள்

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடி, கோடியாய் சம்பளம் வாங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை அவர்கள் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள்.... மேலும் படிக்க

8:15 AM IST

Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கே.கே. நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:59 AM IST

அதிகார திமிரு!பதவி மமதையில் ஒருவராக ஆட்டம் போடாதீங்க ஆளுநரே? ஆன்லைன் சூதாட்டத்தை மறைமுக ஆதரிக்கிறீர்களா? சீமான்

இணையச் சூதாட்டங்களுக்கெதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் தராது இழுத்தடித்து வரும் ஆளுநரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:35 AM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு... இன்று வெளியாக போகும் தீர்ப்புக்கு நேரம் குறித்த நீதிபதிகள்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

மேலும் படிக்க

7:34 AM IST

சொத்து குவிப்பு வழக்கு.. ஆ.ராசாக்கு அதிர்ச்சி கொடுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம்..!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

2:33 PM IST:

ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். லைகர் படம் படுதோல்வி அடைந்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்திற்காக ஹவாலா பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:05 PM IST:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

1:42 PM IST:

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார்  திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம் என்றும் அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 
11:52 AM IST:

பிரபாஸ், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபாஸ் புரபோஸ் பண்ணியதாகவும், இதனையடுத்து பிரபாஸின் காதலை ஏற்றுக்கொண்ட கீர்த்தி சனோன் அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் உலா வந்தன. மேலும் படிக்க

11:36 AM IST:

பெங்களூருவில் ராபிடோ பைக்கை புக் செய்து பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிங்க

11:35 AM IST:

ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது.

மேலும் படிங்க

11:05 AM IST:

மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மேட்டுபாளையம் -  கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாளும் இயக்கப்படும் தினசரி  சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 

10:28 AM IST:

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

10:22 AM IST:

கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு, அவருடன் செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி உள்ளனர். இதுகுறித்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர், ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் படிக்க

9:42 AM IST:

புரமோஷனுக்கு வர மறுக்கும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில், இளம் ஹீரோயின் ஒருவர் தான் நடித்த படத்தை புரமோட் செய்வதற்காக தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டி உள்ளார்.  மேலும் படிக்க

9:30 AM IST:

 பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரிடம் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதனையடுத்து முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க..

9:08 AM IST:

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி(32) நடை பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:08 AM IST:

* சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 1, 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1, 2, 3ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து. 

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை  எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை- எம்.ஜி.ஆர். சென்டிரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது 

8:56 AM IST:

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடி, கோடியாய் சம்பளம் வாங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை அவர்கள் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள்.... மேலும் படிக்க

8:15 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கே.கே. நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:59 AM IST:

இணையச் சூதாட்டங்களுக்கெதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் தராது இழுத்தடித்து வரும் ஆளுநரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:34 AM IST: