அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் உணவருந்துவதற்காக அமைக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் உணவருந்துவதற்காக அமைக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. பல உணவகங்களில் சொற்ப அளவிலேயே வருவாய் மட்டுமே கிடைக்கிறது.

இதையும் படிங்க;- தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க தினகரன்! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை!மாஃபா விளாசல்

இந்நிலையில், மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன் சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பல அம்மா உணவகங்கள் தினசரி 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் நிலையில் உள்ளது. மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை மட்டும் மூட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பொதுமக்களிடம் வரவேறபு இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். இந்நிலையில், ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது.

இதையும் படிங்க;- கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!

அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- அவங்க வேற! நாங்க வேற! அந்த மூன்று பேருக்கும் அதிமுகவில் எப்போதும் இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்..!