அவங்க வேற! நாங்க வேற! அந்த மூன்று பேருக்கும் அதிமுகவில் எப்போதும் இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்..!

அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. 

TTV.Dhinakaran Sasikala OPS have no place in AIADMK..  jayakumar

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் என பிரதமரோ, அமித்ஷாவோ பேசியது இல்லை, இனியும் அப்படி நடக்காது. பாஜக தேசிய கட்சி தோழமை கட்சி என்ற அடிப்படையில் எங்கள் அணுகுமுறை இருக்கும் என்றார். 

இதையும் படிங்க;- ஏழு பேர் விடுதலைக்காக துரும்பை கூட கிள்ளிப் போடாதா திமுக.. ஸ்டாலினை போட்டு தாக்கும் ஜெயகுமார்..!

TTV.Dhinakaran Sasikala OPS have no place in AIADMK..  jayakumar

திமுக பொறுப்பேற்ற பிறகு எல்லா துறைகளில் ஊழல் நடைபெற்று வருகிறது. பல துறைகளில் ஊழல் செய்து குடும்பமாக பணம் கொள்ளையடித்தது திமுக ஆட்சி. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக ஆட்சியில் இருக்கிறது. செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசமாட்டார். எங்களைப் பற்றித்தான் பேசுவார். முதல்வரின் ஊதுகுழல் அவர். செல்வப் பெருந்தகை காங்கிரசின் தலைவராக வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை செய்து கொண்டுள்ளார். இதை நாங்கள் சொல்லவில்லை அந்த கட்சியை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;-  பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்

TTV.Dhinakaran Sasikala OPS have no place in AIADMK..  jayakumar

ஆளுநரை தாங்கள் சந்திக்கும் போது அரசியல் குறித்து பேசவில்லை. தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சீர்கெட்டு உள்ளது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது என்றார். ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு அதிமுக கூட்டணியில் நிச்சயம் இடமில்லை. திமுகவின் ஊதுகுழாலாக செயல்படும் ஓபிஎஸ் அதிமுகவில் எப்படி சேர்க்க முடியும் என ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;- மரத்தில் துணியை சுற்றி வைத்தால் கூட அண்ணார்ந்து பார்ப்பவர் ஜெயக்குமார்.. பங்கமாய் கலாய்த்த கோவை செல்வராஜ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios