தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க தினகரன்! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை!மாஃபா விளாசல்

அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக உள்ளது. அதிமுக செயல்படாத கட்சி. இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் பிடிக்கமாட்டேன். கழுத்தையும் பிடிக்கமாட்டேன்.

TTV.Dhinakaran is not qualified to talk about AIADMK..  Ma Foi Pandiarajan

தனிக்கட்சி நடத்தும் டிடிவி. தினகரனுக்கு அதிமுகவைப் பற்றி பேச தகுதி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் காட்டமாக கூறியுள்ளார். 

அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கத்தோடு இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக உள்ளது. அதிமுக செயல்படாத கட்சி. இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் பிடிக்கமாட்டேன். கழுத்தையும் பிடிக்கமாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த டிடிவி.தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!

TTV.Dhinakaran is not qualified to talk about AIADMK..  Ma Foi Pandiarajan

இதுதொடர்பாக சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தேவையில்லாத இந்த நேரத்தில் தூங்கும் புலியை டிடிவி. தினகரன் சீண்டி வருகிறார். அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சியுடன் வீறு கொண்டு எழுந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. டிடிவி.தினகரன் அதிமுக பிரிந்து கிடப்பது போன்று கருத்தை பதிவிடுகிறார்.  

இதையும் படிங்க;- சசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..!

TTV.Dhinakaran is not qualified to talk about AIADMK..  Ma Foi Pandiarajan

99% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி  வளர்த்த கட்சி அதிமுக கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கிறது. இபிஎஸ் தனியாக கட்சி தொடங்க வாய்ப்பு கிடையாது.  தனிக்கட்சி நடத்தும் டிடிவி. தினகரனுக்கு அதிமுகவைப் பற்றி பேச உரிமை இல்லை என மாஃபா.பாண்டியராஜன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்.. இபிஎஸ் அணிக்கு தாவி ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி வைத்தியம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios