MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • 6 மாதங்கள் முடிந்தது.! இனி அதிரடி ஆட்சி தொடக்கம் – முதல்வர் விஜய்யின் அடுத்த பிளான் என்ன?

6 மாதங்கள் முடிந்தது.! இனி அதிரடி ஆட்சி தொடக்கம் – முதல்வர் விஜய்யின் அடுத்த பிளான் என்ன?

முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

4 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 28 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுக்கும் ஜனநாயகன்
Image Credit : chatgpt created image

எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுக்கும் ஜனநாயகன்

தமிழக அரசியலில் இனி அதிரடி மாற்றங்கள் நிகழுமா? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதல்வர் விஜய் எடுக்கப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது, நேர்மையான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது, அரசு நிர்வாகத்தைச் சீரமைப்பது எனப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

DMK Congress Alliance: திமுக – காங்கிரஸ் மீண்டும் நெருங்குகிறதா? 6 மாதப் பிரிவுக்குப் பிறகு அரசியலில் திடீர் திருப்பம்.. மம்தா பானர்ஜி போடும் புதிய கணக்கு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
எம்எல்ஏவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயக்கம் வேண்டாம்!
Image Credit : ANI

எம்எல்ஏவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயக்கம் வேண்டாம்!

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக எந்தச் சலுகையும் வழங்கக்கூடாது என்பதே முதல்வரின் நிலைப்பாடு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Shani Margi 2026: சனியின் நேர்கதியால் பணம், பதவி யோகம் பெறும் ராசிகள்!

அரசியல் செல்வாக்கு, பதவி, கட்சி அதிகாரம் ஆகியவற்றைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளில் இருந்து யாரும் தப்பிக்கக் கூடாது என்பதுதான் ஒரு நல்லாட்சியின் அடிப்படை. இந்த அணுகுமுறை உண்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாக வாய்ப்புள்ளது.

Shani Sade Sati 2027: ஏழரை நாட்டுச் சனி.! எந்த ராசிக்கு சோதனை? யாருக்கு ராஜயோகம்?

37
ஜெயலலிதா பாணியில் காவல்துறைக்கு சுதந்திரம்?
Image Credit : Asianet News

ஜெயலலிதா பாணியில் காவல்துறைக்கு சுதந்திரம்?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவல்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு. அதேபோன்ற நிர்வாக அணுகுமுறையை விஜய் பின்பற்ற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

8th Pay Commission: ஓய்வூதியதாரர்களின் 11 முக்கிய கோரிக்கைகள்.. மாத ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

காவல்துறையினர் அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும் கடும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்திய விஜய் போலீசாருக்கு முழு அதிகாரம் அளிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவற்றை விரைவாக விசாரிப்பது, ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த முதலவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

Salary Hike DA Rise: அரசு ஊழியர்களுக்கு டபுள் குட்நியூஸ்.. DA உயர்வு முதல் புதிய சம்பளம் வரை!

காவல்துறைக்கு சுதந்திரம் அளிப்பது என்பது சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்துவதற்கான அதிகாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் காவல்துறையின் செயல்பாடுகளும் சட்டத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் கண்டிப்புடன் கூறியுள்ளதாக தெரிகிறது.

47
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்?
Image Credit : facebook.com/CMOTamilnadu

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்?

அரசு நிர்வாகத்தில் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், துறைச் செயலர்கள் ஆகியோரின் செயல்பாடுகளே அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதைத் தீர்மானிக்கின்றன.

இனி PF பணத்தை UPI மூலம் எடுக்கலாம்! அடுத்த மாதம் அறிமுகமாகும் புதிய வசதி.. ரூ.1,000 குறைந்தபட்ச வரம்பு – EPFO திட்டம் என்ன?

நேர்மையான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமித்து, அவர்களின் பணிகளில் தேவையற்ற அரசியல் தலையீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் கூறியுள்ள முதல்வர் அதனை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் புகார்கள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றுக்காக மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை மாற வேண்டும் எனவும் கூறிய முதல்வர் அதனை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற அடிப்படை நிர்வாகச் சீர்திருத்தங்களே அரசின் செயல்பாட்டுக்கு உண்மையான அடையாளமாக இருக்கும் என்பதால் புத்தாண்டு முதல் தமிழ்நாட்டு அரசியல் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் என்கின்றனர் தவெகவினர்.

Vijay vs Stalin: திமுகவுக்கு புதிய அரசியல் சவால்.. விஜய் அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மாறும் களம்?

57
அரசு மருத்துவமனைகள் முதல் போக்குவரத்து வரை அதிரடி மாற்றம் வருமா?
Image Credit : X

அரசு மருத்துவமனைகள் முதல் போக்குவரத்து வரை அதிரடி மாற்றம் வருமா?

மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது அரசு சேவைகளில் ஏற்படும் மாற்றங்களைத்தான். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாகப் பணியாற்றுவது, மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பது, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவது ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் அரசு அலுவலகங்களில் லஞ்சம், காலதாமதம், அலைக்கழிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போக்குவரத்து விதிமீறல்கள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவது உள்ளிட்டவற்றிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால்தான் மக்களிடம் அரசின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

Back Pain: உலகம் முழுவதும் அதிகரிக்கும் முதுகுவலி.. 40 வயதை கடந்தவர்கள் இந்த 8 விஷயங்களை மறக்காதீங்க!

67
ஆறு மாதங்கள் முடிந்தது; இனிதான் உண்மையான சோதனை!
Image Credit : X

ஆறு மாதங்கள் முடிந்தது; இனிதான் உண்மையான சோதனை!

விஜய் தலைமையிலான தமிழக அரசு ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளிலும் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.

Budhaditya Rajyog: டிசம்பர் 2 முதல் புதாதித்ய ராஜயோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தீர்ந்து அதிர்ஷ்டம் அடிக்கும்

சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நவம்பர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு விசாரணை உயர் அதிகாரிகளின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டது. குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ மறுத்துள்ளார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்ற விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சிமுறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

Traditional Rice: ரூ.30,000 மட்டும் முதலீடு!ரூ.1 லட்சம் வரை வருமானம்? பாரம்பரிய நெல் சாகுபடியின் ரகசியம்!

77
இனி விஜய்யின் ஆட்சியில் உண்மையிலேயே மாற்றம் ஏற்படுமா?
Image Credit : X

இனி விஜய்யின் ஆட்சியில் உண்மையிலேயே மாற்றம் ஏற்படுமா?

இனி விஜய்யின் ஆட்சியில் உண்மையிலேயே மாற்றம் ஏற்படுமா? தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசு அலுவலகங்கள் முதல் காவல்துறை வரை நிர்வாகம் மாறுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அடுத்தடுத்த மாதங்களில் அரசின் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும். அரசியல் வாக்குறுதிகளைத் தாண்டி மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்தான் விஜய் அரசின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது.

Saidapet Vada Curry: சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடைகறி.! வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க.. சுவை வேற லெவல்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
அரசியல் சுவாரஸ்யம்
அரசியல்
திமுக
ஏசியாநெட் நியூஸ்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delimitation: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு பச்சை கொடி காட்டிய திமுக..! மு.க.ஸ்டாலின் அதிரடி..
Recommended image2
DMK Congress Alliance: திமுக – காங்கிரஸ் மீண்டும் நெருங்குகிறதா? 6 மாதப் பிரிவுக்குப் பிறகு அரசியலில் திடீர் திருப்பம்.. மம்தா பானர்ஜி போடும் புதிய கணக்கு!
Recommended image3
Delimitation Bill: தமிழகத்தின் அரசியல் ஆட்டமே மாறப்போகுதா..? 39 தொகுதிகள் 59 ஆகும் மெகா பிளான்..!
Related Stories
Recommended image1
Vijay vs Stalin: திமுகவுக்கு புதிய அரசியல் சவால்.. விஜய் அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மாறும் களம்?
Recommended image2
CM Vijay : விஜய் அரசின் அடுத்த மெகா திட்டம்! தமிழகத்திற்கு குவியப்போகும் புதிய முதலீடுகள்! 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved