விஜய் முதல் நெப்போலியன் வரை... நடிப்பை தாண்டி தொழில்கள் மூலம் கோடி கோடியாய் கல்லாகட்டும் சினிமா நட்சத்திரங்கள்
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடி, கோடியாய் சம்பளம் வாங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை அவர்கள் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களும் ஒருவர். இவர் படங்களில் நடிப்பதை தவிர, 3 கல்யாண மண்டபங்களை சொந்தமாக வைத்துள்ளார். இந்த மூன்று மண்டபங்களும் சென்னையில் தான் இருக்கின்றன. அதுமட்டுமின்றி 6 அப்பார்ட்மெண்ட்களும் வைத்திருக்கிறார். அவற்றை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் விஜய்.
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர். இவர் நிறைய கம்பெனிகளில் முதலீடு செய்துள்ள அஜித், இவை தவிர ரியல் எஸ்டேட்டிலும் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வைத்துள்ளாராம். இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் பல கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சினிமாவிலேயே முதலீடு செய்துவிடுவார். அந்த வகையில் இவர் நடிகராக மட்டுமின்றி ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் என்கிற நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றிப்படங்களையும் தயாரித்து வருகிறார். இதுதவிர ஹவுஸ் ஆஃப் கதர் என்கிற ஆடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த், தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களும் ஒருவராக இருந்து வருகிறார். இவரும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி சென்னையில் சொந்தமாக திருமண மண்டபத்தையும் வைத்து இருக்கிறார். இதுதவிர நிறைய ஓட்டல்களிலும் முதலீடு செய்துள்ளாராம். அப்பார்ட்மெண்ட்களையும் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம் ரஜினி.
சிம்பு
தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகராக வலம் வரும் சிம்பு, நடிப்பை தவிர்த்து பிரபல தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து அதன்மூலம் மாதந்தோறும் வருமானம் ஈட்டி வருகிறாராம். இவரது தந்தையும் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தனுஷ்
நடிகர் தனுஷ் வொண்டர்பார் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன்மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்து உள்ளார். இதுதவிர இவருக்கு சொந்தமாக சென்னையில் பல வீடுகளும் உள்ளன. அவற்றையெல்லாம் வாடகைக்கு விட்டு அதன்மூலம் சம்பாதித்து வருகிறார் தனுஷ்.
இதையும் படியுங்கள்.... லவ் டுடே முதல் வதந்தி வரை... இந்த வாரம் OTT ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் மற்றும் வெப் தொடரின் முழு லிஸ்ட்
சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பைத் தாண்டு அகரம் பவுண்டேசன் என்கிற தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி அதன்மூலம் பல்வேறு ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதுமட்டுமின்றி, இவர், சொந்தமாக காற்றாலைகளை வைத்திருக்கிறார். இதுதவிர ஆடை ஏற்றுமதி வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஏர்போர்ட் பார்க்கிங் டெண்டரை எடுத்து அதன் மூலம் பல கோடி சம்பாதித்து வருகிறார் சூர்யா.
விக்ரம்
தமிழ் சினிமாவில் திறமைவாய்ந்த நடிகர்களும் ஒருவரான விக்ரம், இவரும் நடிப்பை தாண்டி நிறைய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து அதன்மூலம் லாபம் ஈட்டி வருகிறார். இவரது மகன் துருவ் விக்ரமும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா
தமிழ் திரையுலகில் திறமை வாய்ந்த நடிகராக இருக்கும் ஆர்யா, சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர தயாரிப்பி நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். தமிழில் அவர் தயாரிப்பில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
பிரசாந்த்
90ஸ் கிட்ஸின் பேவரைட் நடிகரான பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் படங்களில் நடிக்காவிட்டாலும், இவர் பிசினஸில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். இவரும், இவரது தந்தை தியாகராஜனும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நகை வணிக வளாகத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் அதிகளவில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நெப்போலியன். இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஜீவன் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் பல கோடி வருமானமும் ஈட்டி வருகிறார்.
சுருதி ஹாசன்
நடிகை சுருதி ஹாசன் தற்போது தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளில் பிசியாக இருக்கிறார். இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் குறும்படங்கள், அனிமேஷன் படங்கள் ஆகியவற்றை தயாரித்து அதன்மூலம் லாபமும் ஈட்டி வருகிறார் சுருதி.
நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதோடு, சாய் வாலா, லிப் பாம், ஃபிபோலா போன்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருக்கிறார். இதுதவிர வெளிநாடுகளிலும் இவர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... சித்தார்த்துடன் லிவிங்டூ கெதர் வாழ்க்கையில் அதிதி ராவ்! மும்பையில் ஒன்றாக சுற்றும் ஜோடி... லேட்டஸ்ட் போட்டோஸ்!