MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லவ் டுடே முதல் வதந்தி வரை... இந்த வாரம் OTT ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் மற்றும் வெப் தொடரின் முழு லிஸ்ட்

லவ் டுடே முதல் வதந்தி வரை... இந்த வாரம் OTT ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் மற்றும் வெப் தொடரின் முழு லிஸ்ட்

வார வாரம் தியேட்டரில் படம் ரிலீசாவது போல் ஓடிடி-யிலும் படங்களும் வெப் தொடர்களும் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு தொகுப்பு இதோ.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 30 2022, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நவம்பர் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் லவ் டுடே. வெளியானது முதல் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. வருகிற டிசம்பர் 2-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லவ் டுடே திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பரோல்

துவாரக் ராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் பரோல். லிங்கா, ஆர்.எஸ்.கார்த்திக் நடிப்பில் வெளியான இப்படம் பரோலில் வெளிவரும் கைதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

37

மிரள்

எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி ரிலீசான திரைப்படம் மிரள். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராட்சசன் பட தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்திருந்தார். இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆயுர்வேத சிகிச்சையை தொடர்ந்து... மேல் சிகிச்சைக்காக வெளிநாடு போகிறாரா சமந்தா? எந்த நாடு... வெளியான தகவல்!

47

நித்தம் ஒரு வானம்

புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த நவம்பர் 4-ந் தேதி ரிலீசான திரைப்படம் நித்தம் ஒரு வானம். அசோக் செல்வன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ஷிவானி ராஜசேகர் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

57

காலங்களில் அவள் வசந்தம்

புதுமுக இயக்குனர் ராகவ் மிர்டத் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம். அஞ்சலி நாயர், கவுசிக் ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி அன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

67

வதந்தி (வெப் தொடர்)

கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் தொடர், வருகிற டிசம்பர் 2-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். இவர்கள் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான சுழல் வெப்தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

77

பிற மொழி வெளியீடுகள்

பிற மொழிகளை பொறுத்தவரை தெலுங்கில் தர்மபுரி (Dharmapuri) என்கிற படம் ஆஹாவில் ரிலீசாக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலின் மான்ஸ்டர் (Monster) படம் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இந்தியில் ராஷ்மிகாவின் குட் பாய் (GoodBye) படம் நெட்பிளிக்ஸிலும், இந்தியா லாக்டவுன் (India Lockdown) ஜீ5 தளத்திலும், குவாலா (Qala) படம் நெட்பிளிக்ஸிலும் ரிலீசாக உள்ளன.

இதையும் படியுங்கள்... துணிவு லுக்கிருக்கு எண்டு கார்டு..! மாஸ்ஸான நியூ லுக்கில் அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
-
SLSL
(11.2 ov)21/2
Day 1 - Session 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mirnalini Ravi Weds Maha Vishnu : லங்காவி தீவில் லவ் மேரேஜ்... வைரலாகும் மகா விஷ்ணு - மிருணாளினி ரவி வெட்டிங் கிளிக்ஸ்
Recommended image2
Nayanthara : தொடர் தோல்விகள்... சரியும் நயன்தாராவின் மார்க்கெட்! நெக்ஸ்ட் என்ன செய்யப்போகிறார் லேடி சூப்பர் ஸ்டார்?
Recommended image3
Dare Devil Villain : அஜித்துக்கு வில்லனாகும் ரஜினியின் ஜிகிரிதோஸ்து... டேர் டெவில் படத்தின் அடிபொலி அப்டேட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved