துணிவு லுக்கிருக்கு எண்டு கார்டு..! மாஸ்ஸான நியூ லுக்கில் அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..
தல அஜித் கடந்த சில மாதங்களாகவே 'துணிவு' படத்தின் லுக்கில்... பெரிய தாடி, மீசையோடு இருந்த நிலையில், தற்போது செம்ம மஸான நியூ லுக்கிற்கு மாறியுள்ளார். இவரது லேட்டஸ்ட் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருக்கும் அஜித், நடிப்பில் கடைசியாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் வெளியாகி... வசூலில் சக்க போடு போட்ட நிலையில், இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து 'துணிவு' படத்தில் நடித்துள்ளார்.
வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அஜித் பல ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி உள்ளது மட்டும் இன்றி... வலிமை படத்திற்கு நிகராக பைக் ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் இந்த படத்தில் இருந்து... ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட போதிலும், அஜித் துணிவு பட லுக்கிலேயே வலம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது தாடி, மீசை போன்றவற்றை மழித்து விட்டு... மாஸ் லுக்கிற்கு மாறியுள்ளார். இவருடைய நியூ லுக் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.