ஆயுர்வேத சிகிச்சையை தொடர்ந்து... மேல் சிகிச்சைக்காக வெளிநாடு போகிறாரா சமந்தா? எந்த நாடு... வெளியான தகவல்!
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனைக்காக ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, அரியவகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மிக விரைவாக குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட நடிகை சமந்தா ஒரு கையில் ஊசியுடன் ஒரு கையால் உடல்பயிற்சி செய்த வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மனதையே கலங்க செய்த நிலையில்... நடப்பதற்கு கூட சமந்தா மிகவும் சிரமப்படுவதாக கூறப்பட்டது.
'புஷ்பா' பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட நபர் அதிரடி கைது!
மேலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
அதே போல் சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம்.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், தென்கொரியா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று உடல்நலம் அடைந்த பின்னர் மீண்டும், படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.