அதிர்ச்சி... சினிமாவை விட்டு விலகுகிறாரா சாய் பல்லவி..! பின்னணி என்ன..? அவசரஅவசரமாக நடக்கும் வேலைகள்!
நடிகை சாய் பல்லவி, திரையுலகை விட்டு விலக உள்ளதாகவும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவலும், தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் அறிமுகமான 'பிரேமம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தன்னுடைய எளிமையான அழகால் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்த்திழுத்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி இடத்தில் இருக்கும் சாய் பல்லவி, தன்னை தேடிவரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், மனதிற்கு நிறைவான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
Robo Shankar: ஸ்பெஷல் நாளில்... ரோபோ ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ஸ்டார்!
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிகர் சூர்யா தயாரிப்பில் நடித்திருந்த 'கார்கி' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது. சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, மற்றொரு விஷயத்தில் கவனம் செலுத்தி வருவதால், பல பட வாய்ப்புகளை மறுத்து வருவதாகவும், எனவே இவர் திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஜார்ஜியாவில் தன்னுடைய மருத்துவ படிப்பை படித்த இவருக்கு திடீர் என 'பிரேமம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே... நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது தன்னுடைய மருத்துவபடிப்பு யாருக்கும் பயன் இல்லாமல் போய் விட கூடாது என, தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறாராம்.
இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் பரபரப்பாக ஒரு பக்கம் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் , சாய் பல்லவி... மருத்துவ பணிக்காக திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதே நேரம் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், சாய் பல்லவி மருத்துவ பணியை கவனித்துக் கொண்ட, நடிப்பிலும் கவனம் செலுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.