- Home
- Cinema
- Robo Shankar: ஸ்பெஷல் நாளில்... ரோபோ ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ஸ்டார்!
Robo Shankar: ஸ்பெஷல் நாளில்... ரோபோ ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ஸ்டார்!
நடிகர் ரோபோ ஷங்கரின், திருமண நாளை முன்னிட்டு... அவரது குடும்பத்தினரை சந்திக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
டைமிங் காமெடி செய்வதில், கிங்கான ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் இவர்களது மகளான இந்திரஜாவும் தளபதி விஜயின் 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் விருமன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கலைக்குடும்பமாக வலம் வரும் ரோபோ ஷங்கர் தன்னுடைய 22வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்த நிலையில் சூப்பர் ஸ்டாரிடம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களை திடீர் என வரவழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.