MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருப்புக்கு முன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா

கருப்புக்கு முன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்காத நிலையில், அவரின் அடுத்த படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2026, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vishwanath And Sons First Look Released
Image Credit : X

Vishwanath And Sons First Look Released

சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தாலும் சூர்யாவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் சூர்யா. அவர் கைவசம் தற்போது மூன்று முத்தான படங்கள் உள்ளன. அதில் இரண்டு படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஒரு படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த மூன்று படங்களுமே இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா கைவசம் உள்ள மூன்று படங்களில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

24
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
Image Credit : X

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

அந்தப் படம் வேறெதுவுமில்லை, அவரின் 46வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் தான். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். வாத்தி, லக்கி பாஸ்கர் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, முதன்முறையாக சூர்யா உடன் இணைந்துள்ள படம் இது என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Related Articles

Related image1
ஆகாசத்தை வசப்படுத்தியவர்கள் மீண்டும் கைகோர்க்கிறார்கள்: சூர்யா - சுதா கொங்கரா ரீ-யூனியன்!
Related image2
சிம்பு தவறவிட்ட படத்தை தட்டிதூக்கிய சூர்யா... கோலிவுட்டில் உருவாகும் புதுக் கூட்டணி..!
34
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் எப்போ?
Image Credit : Twitter

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் எப்போ?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் குழந்தையுடன் செம ஸ்மார்ட்டாக காட்சியளிக்கிறார் சூர்யா. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். அது என்னவென்றால், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் இந்த போஸ்டரில் ஒளிந்திருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் என குறிப்பிட்டுள்ளதால், இப்படம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ந் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
கப்சிப்னு இருக்கும் கருப்பு
Image Credit : instagram/Suriya Sivakumar

கப்சிப்னு இருக்கும் கருப்பு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியே அறிவிக்கப்பட்டாலும், அவர் கைவசம் உள்ள மற்றொரு படமான கருப்பு எப்போ ரிலீஸ் ஆகும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கருப்பு திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ளார். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறாஅர். அப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் ஓடிடி உரிமை உற்பனை செய்வதில் இழுபறி நீடித்ததால் ரிலீஸ் தேதியும் தாமதம் ஆனது. அநேகமாக வருகிற ஏப்ரல் மாதம் 30ந் தேதி கருப்பு திரைப்படம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட சான்ஸ் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay - Sangeetha: மாறும் அரசியல் களம்.! விஜய்க்காக வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா.?! தளபதிக்காக களம் இறங்கிய குடும்ப உறவுகள்.!
Recommended image2
புருஷன் கூடவே இல்ல... நீ எப்படி கர்ப்பமான? தங்கமயில் மீது மீனாவுக்கு வந்த சந்தேகம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image3
நல்லவரா? கெட்டவரா? குணசேகரன் மீது ஜனனிக்கு வந்த டவுட் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ஆகாசத்தை வசப்படுத்தியவர்கள் மீண்டும் கைகோர்க்கிறார்கள்: சூர்யா - சுதா கொங்கரா ரீ-யூனியன்!
Recommended image2
சிம்பு தவறவிட்ட படத்தை தட்டிதூக்கிய சூர்யா... கோலிவுட்டில் உருவாகும் புதுக் கூட்டணி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved