பட புரமோஷனுக்கு வரமாட்டேன்னு அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா! தெருதெருவாக போஸ்டர் ஒட்டி அசத்தல்
புரமோஷனுக்கு வர மறுக்கும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில், இளம் ஹீரோயின் ஒருவர் தான் நடித்த படத்தை புரமோட் செய்வதற்காக தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டி உள்ளார்.
சினிமா என்பது பல கோடிகள் புரளும் தொழிலாக இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் தரமான படங்களை எடுத்தால் மட்டும் போதாது, அதனை எந்த அளவுக்கு புரமோட் செய்கிறோம் என்பதில் தான் அப்படத்தின் வெற்றியே உள்ளது. இதற்கு சாட்சியாக ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் 2, விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களை சொல்லலாம்.
இவை அனைத்தும் இந்த ஆண்டு ரிலீசாகி அதிகளவும் வசூலை ஈட்டிய படங்கள், பான் இந்தியா படங்களாக ரிலீசான இவை அனைத்தையும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக புரமோட் செய்தனர். படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, மும்பை என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று புரமோட் செய்தனர். சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் லவ் டுடே படம் இந்த அளவு வசூலை ஈட்ட காரணம் அப்படத்தின் புரமோஷன் தான்.
இதையும் படியுங்கள்... விஜய் முதல் நெப்போலியன் வரை... நடிப்பை தாண்டி தொழில்கள் மூலம் கோடி கோடியாய் கல்லாகட்டும் சினிமா நட்சத்திரங்கள்
இப்படி புரமோஷனில் படக்குழுவினர் ஆர்வம் காட்டி வந்தாலும், இன்றளவும், சில முன்னணி நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த புரமோஷனுக்கே வர மாட்டேன் என அடம்பிடித்து வருவதோடு, நல்ல படம் தனக்கான புரமோஷனை தானே தேடிக் கொள்ளும் என்றெல்லாம் கூறி மழுப்பி வருகின்றனர். இது பட தயாரிப்பாளருக்கு தான் தலைவலியாக உள்ளது.
இப்படிப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு மத்தியில், இளம் ஹீரோயின் ஒருவர் தான் நடித்த படத்தை புரமோட் செய்வதற்காக தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டி உள்ளார். மஞ்சக் குருவி எனும் படத்தின் ஹீரோயினான நீரஜா தான் இவ்வாறு செய்துள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. படம் வெற்றிபெறுவதற்காக இவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை நீரஜாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... லவ் டுடே முதல் வதந்தி வரை... இந்த வாரம் OTT ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் மற்றும் வெப் தொடரின் முழு லிஸ்ட்