ராமாயணம் படத்தில் இணையும் கிறிஸ்டோபர் நோலன்.. ரூ.4,000 கோடி பட்ஜெட் படம்னா சும்மாவா
இயக்குநர் நிதேஷ் திவாரியின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை உலகளவில் அதிகரித்துள்ளது.

ராமாயணம் படத்தில் இணையும் கிறிஸ்டோபர் நோலன்
ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படம் குறித்து பெரிய அளவில் பேசப்படுகிறது. சுமார் ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த மாபெரும் திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே முடிவடைந்ததாக கூறப்படுகிறது. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யஷ் மற்றும் ஹனுமனாக சன்னி டியோல் நடித்துள்ளனர்.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்
இந்நிலையில், ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இந்த படத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக உள்ளது பேசப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற நோலன், படத்தின் இறுதி எடிட்டிங், விஎஃப்எக்ஸ் மற்றும் சவுண்ட் டிசைன் பணிகளை மேற்பார்வையிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ஹோய்ட் வான் ஹொய்டேமாவும் தொழில்நுட்ப பணிகளில் இணைகிறார் என கூறப்படுகிறது.
ராமாயணம் படம்
சமீபத்திய தகவலின்படி, 2026 ஆகஸ்ட் மாதம் முதல் இந்தத் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 72 நாட்கள் நீளமான ஒரு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஓப்பன்ஹைமர்’ படத்தில் பணியாற்றிய ஜெனிஃபர் லேம் எடிட்டராக செயல்படுவார் என்றும், அவரை நோலன் மேற்பார்வை செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியாகியுள்ளன.
சீதையாக நடிக்கும் சாய் பல்லவி
மேலும், இசையில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இணைந்துள்ளதாகவும், பல ஆஸ்கர் வெற்றியாளர்கள் இந்த திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஐமேக்ஸ் வடிவில் உருவாகி, அதே வடிவில் வெளியாகும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
உலகத் தரத்தில் உருவாகும் ராமாயணம்
ஆனால், இந்த தகவல்கள் குறித்து தயாரிப்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இருந்தாலும், ‘ராமாயணம்’ உலகத் தரத்தில் உருவாகும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சியாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

