MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம்.. சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா..? தமிழக அரசை விளாசும் விஜய்..

நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம்.. சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா..? தமிழக அரசை விளாசும் விஜய்..

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கிராம மக்களை கொடூரமாக வெட்டியதில் இருவர் பலியான சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 03 2026, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நெல்லையில் பரபரப்பு..
Image Credit : Instagram

நெல்லையில் பரபரப்பு..

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

23
மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
Image Credit : Asianet News

மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?

Related Articles

Related image1
தமிழக மக்களே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.3500 போட்ருக்காரு
Related image2
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
33
தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி
Image Credit : Asianet News

தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி
Recommended image2
தமிழக மக்களே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.3500 போட்ருக்காரு
Recommended image3
Now Playing
காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
Related Stories
Recommended image1
தமிழக மக்களே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.3500 போட்ருக்காரு
Recommended image2
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved