MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக மக்களே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.3500 போட்ருக்காரு

தமிழக மக்களே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.3500 போட்ருக்காரு

மகளிர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு அண்மையில் கோடைகால சிறப்பு நிதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்கி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 03 2026, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி
Image Credit : X/@arivalayam

விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி..! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

24
முதியோர், கைம்பெண்கள்
Image Credit : Google

முதியோர், கைம்பெண்கள்

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,

Related Articles

Related image1
டப்பா எஞ்சின்.. யார் யாருக்கு தலைமை-னு தெரியல.. மோடி, EPS-ஐ கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்
Related image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
34
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி
Image Credit : Google

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி

5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமின்றி,மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

44
பசுந்தேயிலை ஆதார விலை
Image Credit : X/@mkstalin

பசுந்தேயிலை ஆதார விலை

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
Recommended image2
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Recommended image3
Now Playing
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
Related Stories
Recommended image1
டப்பா எஞ்சின்.. யார் யாருக்கு தலைமை-னு தெரியல.. மோடி, EPS-ஐ கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்
Recommended image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved