MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபாஸ் உடன் காதலா..? உண்மையை மறைக்க மனமின்றி ஓப்பனாக போட்டுடைத்த பாலிவுட் நடிகை

பிரபாஸ் உடன் காதலா..? உண்மையை மறைக்க மனமின்றி ஓப்பனாக போட்டுடைத்த பாலிவுட் நடிகை

பிரபாஸ் உடனான காதல் சர்ச்சை குறித்து ஆதிபுருஷ் பட நடிகை கீர்த்தி சனோன் இன்ஸ்டாகிராம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 30 2022, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாகுபலி படம் மூலம் பாப்புலர் ஆன நடிகர் பிரபாஸ், அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். பாகுபலி படத்தில் நடித்தபோது கூட அவரும், அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் இருவரும் தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று கூறி காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

24

இதையடுத்து தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபாஸ் புரபோஸ் பண்ணியதாகவும், இதனையடுத்து பிரபாஸின் காதலை ஏற்றுக்கொண்ட கீர்த்தி சனோன் அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் உலா வந்தன.

இதையும் படியுங்கள்... அரசியல்வாதியாகும் மக்கள் செல்வன்... கர்நாடக முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் விஜய் சேதுபதி..?

34

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் வருண் தவான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சனோன் மனதில் இருப்பவர் தற்போது மும்பையில் இல்லை என்றும் அவர் தீபிகா படுகோனே உடன் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறி இருந்தார். அவர் பிரபாஸை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார் என்பதை உறுதி செய்த நெட்டிசன்கள் பிரபாஸ் - கீர்த்தி சனோன் இடையேயான காதல் உண்மை என பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

44

இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன் இதுகுறித்து முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி தன்னைப்பற்றி பரவி வரும் காதல் செய்திகள் துளியும் உண்மையில்லை என்றும் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பிரபாஸை தான் காதலிக்கவில்லை என்பதை உறுதிபடுத்தி உள்ளார் கீர்த்தி சனோன்.

இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Recommended image2
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
Recommended image3
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved