- Home
- Cinema
- Rajinikanth Success: 'உனக்கெல்லாம் கார் கிடையாது... நடந்து போ'னு சொன்ன தயாரிப்பாளர்! பதிலுக்கு ரஜினி செய்த தக் லைஃப் சம்பவம்
Rajinikanth Success: 'உனக்கெல்லாம் கார் கிடையாது... நடந்து போ'னு சொன்ன தயாரிப்பாளர்! பதிலுக்கு ரஜினி செய்த தக் லைஃப் சம்பவம்
Rajinikanth Success Story : இன்னைக்கு தமிழ் சினிமால சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிகாந்த் வெற்றியின் பின்னாடி நிறைய கஷ்டங்களும் அவமானங்களும் இருக்கு. ஒரு தயாரிப்பாளர் செஞ்ச அவமானம்தான் அவரோட வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா அமைஞ்சுது.

Rajinikanth Success Story
இன்னைக்கு தமிழ் சினிமால சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிகாந்த் வெற்றியின் பின்னாடி நிறைய கஷ்டங்களும் அவமானங்களும் சவால்களும் இருக்கு. பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ் கெய்க்வாட், தன்னோட வித்தியாசமான ஸ்டைல்னாலயும் நடிப்புனாலயும் கோடிக்கணக்கான ரசிகர்களோட மனச ஜெயிச்சிருக்காரு. ஆனா ஆரம்ப காலத்துல அவரும் நிறைய அவமானங்களை சந்திச்சிருக்காரு. குறிப்பா ஒரு தயாரிப்பாளர் செஞ்ச அவமானம்தான் ரஜினியோட வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா அமைஞ்சுது. இந்த சம்பவம் 1970-கள்ல நடந்துச்சு.
6 ஆயிரம் ரூபாய்க்கு சம்மதிச்ச ரஜினிகாந்த்
ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருத்தர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்து, தன்னோட படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குனு சொன்னாரு. இதுக்கு சம்பளம் எவ்வளவுனு கேட்டப்போ, ரஜினிகாந்த் 10 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்காரு. கடைசியா பேசி 6 ஆயிரம் ரூபாய்க்கு டீல் முடிஞ்சிருக்கு. ஷூட்டிங் வர சம்மதிச்ச ரஜினிகாந்த், அட்வான்ஸா ஆயிரம் ரூபாய் கேட்டிருக்காரு. ஆனா தயாரிப்பாளர், பணத்தை அடுத்த நாள் புரொடக்ஷன் மேனேஜர் மூலமா குடுத்து விடுறேன்னு சொல்லியிருக்காரு. அடுத்த நாள் புரொடக்ஷன் மேனேஜர், டெய்லர் கூட வந்து ரஜினியோட அளவு எடுத்துட்டு போயிட்டாரு. ஆனா அட்வான்ஸ் பணம் தரல. இதப்பத்தி ரஜினிகாந்த் கேட்டப்போ, தயாரிப்பாளர் போன்ல பேசி அடுத்த நாள் ஸ்டுடியோவுல மேக்கப் போடும்போது பணம் தர்றேன்னு சத்தியம் செஞ்சாரு.
அவமானப்படுத்திய தயாரிப்பாளர்
அடுத்த நாள் காலையில 7 மணிக்கு கார் வரும்னு ரஜினிகாந்த் காத்துட்டு இருந்தாரு. ஆனா கார் லேட்டா வந்துச்சு. கடைசியா சுமார் 8.45-க்கு கார் வந்து அவரை நேரா ஸ்டுடியோவுக்கு கூட்டிட்டு போச்சு. அங்க எல்லாரும் ஷூட்டிங்க்கு ரெடியா இருந்தாங்க. ரஜினிகாந்த் மட்டும் தனக்கு வர வேண்டிய ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ்காக காத்துட்டு இருந்தாரு. அப்போ தயாரிப்பாளர் ஒரு ஆடம்பரமான கார்ல ஸ்டுடியோவுக்கு வந்து இறங்குனாரு. ரஜினிகாந்த் பணத்த பத்தி கேட்டதும், தயாரிப்பாளர் கோபமா பேச ஆரம்பிச்சிட்டாரு.
'என்னய்யா, நீ பெரிய ஆர்ட்டிஸ்ட்டா? ஒன்னு ரெண்டு படத்துல நடிச்ச உடனே பெரிய ஸ்டார் ஆயிட்டியா? மேக்கப் போடுறதுக்கு முன்னாடியே உனக்கு அட்வான்ஸ் குடுக்கணுமா? உனக்கு கேரக்டரும் இல்ல, அட்வான்ஸும் இல்ல. வீட்டுக்கு நடந்து போ'னு அவமானப்படுத்தினாரு. அதுமட்டுமில்லாம, வீட்டுக்கு போறதுக்கு கார் கேட்ட ரஜினிகாந்துக்கு கார் குடுக்கவும் மறுத்துட்டாரு. 'நீ வீட்டுக்கு போறதுக்கும் கார் வேணுமா? அதுக்கும் காசு குடுக்கணும். நடந்து போ'னு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தினாரு. அந்த சமயத்துல ரஜினிகாந்த் கிட்ட நிறைய பணமும் இல்ல. தயாரிப்பாளரோட பேச்சால மனசு ரொம்ப வலிச்சாலும், வேற வழியில்லாம ஸ்டுடியோவுல இருந்து வீட்டுக்கு நடந்தே கிளம்புனாரு.
ஃபீல் பண்ணிய ரஜினி
ஸ்டுடியோவுல இருந்து நடந்து போயிட்டு இருந்த ரஜினிகாந்துக்கு, வழியில '16 வயதினிலே' படத்தோட ரெண்டாவது வார போஸ்டர் கண்ணுல பட்டுச்சு. அதுல அவரோட கேரக்டரோட ஃபேமஸான டயலாக்கும் இருந்துச்சு. தன்னோட படம் சக்சஸ் ஆகிட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் கிட்ட இப்படி ஒரு அவமானத்த சந்திக்க வேண்டியிருக்கேனு வருத்தப்பட்டாரு.
வழியில போயிட்டு இருந்த மக்கள் அவர பாத்து அதே டயலாக்க சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா அந்த நேரத்துல மக்கள் தன்னோட நடிப்ப பாராட்டி டயலாக் சொல்றாங்களா இல்ல தன்னோட நிலைமைய பாத்து கிண்டல் பண்றாங்களானு ஒரு வலி ரஜினிகாந்த தொந்தரவு பண்ணுச்சு. அந்த நிமிஷமே அவரு ஒரு முடிவு பண்ணாரு. எந்த ஸ்டுடியோவுல தனக்கு அவமானம் நடந்துச்சோ, அதே ஸ்டுடியோவுக்கு ஒரு நாள் தானும் ஒரு ஆடம்பரமான கார்ல வந்து இறங்கணும்னு சபதம் எடுத்தாரு.
இத்தாலியன் ஃபியட் காருக்கு சொந்தக்காரரான ரஜினி
அவமானப்பட்ட வெறும் ரெண்டரை வருஷத்துலயே ரஜினிகாந்தோட வாழ்க்கை மாறிப்போச்சு. ஏவிஎம் செட்டியார் கிட்ட இருந்த இத்தாலியன் ஃபியட் காரை 4.25 லட்சம் ரூபாய் குடுத்து வாங்குனாரு. அதுதான் அவரோட வாழ்க்கையில முதல் கார்.
காருக்கு டிரைவரை வேலைக்கு வெச்சுக்க முடிவு பண்ண அவரு, சாதாரண டிரைவர் வேணாம், வெளிநாட்டு கார் ஓட்ட வெளிநாட்டு டிரைவர்தான் வேணும்னு சொல்லியிருந்தாரு. அப்போ ஆங்கிலோ இந்தியனா இருந்த ராபின்சன் என்பவரை டிரைவரா வேலைக்கு வெச்சுக்கிட்டாரு. அவருக்கு ஸ்பெஷலான யூனிஃபார்ம், பெல்ட், தொப்பி அப்புறம் கூலிங் கிளாஸ் கூட வாங்கிக் குடுத்தாரு. அடுத்த நாள் ராபின்சன் காரோட கதவ தொறந்து, 'ரிப்போர்ட்டிங் சார்'னு மரியாதையா வரவேற்றாரு. ரஜினிகாந்தும் தன்னோட ஸ்டைல்ல காரோட பின் சீட்ல உக்காந்து நேரா ஸ்டுடியோவுக்கு கிளம்புனாரு.
ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி எந்த இடத்துல தயாரிப்பாளர் தன்னோட ஆடம்பர கார்ல வந்து ரஜினிகாந்த அவமானப்படுத்தினாரோ, அதே இடத்துக்கு தன்னோட இத்தாலியன் ஃபியட் கார்ல வந்து இறங்குனாரு. கார்ல இருந்து இறங்கி தன்னோட ஸ்டைல்ல சிகரெட் பிடிச்சுட்டே நின்னாரு. அவரை பாக்க ஸ்டுடியோவுல இருந்தவங்க எல்லாரும் வெளிய வந்தாங்க. அப்புறம் அங்க இருந்து நேரா தன்னோட குரு கே. பாலசந்தர் அவரோட கவிதாலயா ஆபிஸ்க்கு கிளம்புனாரு. தான் புது கார் வாங்கியிருக்கறதா சொல்லி, அதை தொட்டு ஆசீர்வாதம் பண்ணும்படி கேட்டுக்கிட்டாரு. பாலசந்தர் சந்தோஷமா காரை ஆசீர்வாதம் பண்ணாரு.
யாராவது அவமானப்படுத்தினா அவங்க மேல கோபப்படுறத விட, நம்ம வேலையாலயே பதில் சொல்லணும்ங்கறதுதான் ரஜினிகாந்தோட வாழ்க்கையில நடந்த இந்த சம்பவத்துல இருந்து கிடைக்கிற பெரிய பாடம். இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்துல இருக்குற ரஜினிகாந்தோட வெற்றிக்கு பின்னாடி இப்படி நிறைய கசப்பான அனுபவங்களும் சவால்களும் இருக்கு. இதனாலதான் ரஜினிகாந்த் தன்னோட சாதனைய பத்தி எப்பவுமே பெருமையா பேசாம, நேரமும் ரசிகர்களோட அன்புதான் தன்னை இந்த அளவுக்கு வளர்த்துச்சுனு சொல்றாரு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.











