ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : திமுகவுக்கு எதிராக அதிமுக.. போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி !
Tamil News live : திமுகவுக்கு எதிராக அதிமுக.. போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி !

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. முதல்வரை சந்திக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் - அதிரடி திருப்பம்
டிகிரி மட்டும் போதும்.. தமிழக விமான நிலையங்களில் அருமையான வேலைவாய்ப்பு - முழு தகவல்கள் !
தமிழக விமான நிலையங்களில் இளநிலை உதவியாளர் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அரசு கொடுக்கும் இலவச தேர்தல் வாக்குறுதிகளில் நீதிமன்றம் தலையிடவே முடியாது.. திமுக முன் வைத்த
இலவசம் குறித்த வழக்கில் திமுக முன்வைத்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தால் ஏற்க்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு: மேலும் படிக்க
தமிழ் மொழி, பண்பாடு தெரியலன்னா வாய்மூடி அமைதியா இருங்க.. ஆளுநர் ஆர்.என் ரவியை பங்கம் செய்த பழ. நெடுமாறன்.
திருவள்ளுவர் திருக்குறளில் ஆதிபகவன் என கூறி தான் ஒரு ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என பேசி ஆளுநர் ஆர்.என் ரவி தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் என பழ. நெடுமாறான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க
. லைகாவுக்கு 21 கோடி கடன் பாக்கி.. சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சொல்லி நடிகர் விஷாலுக்கு ஆப்பு.
லைக்கா நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
அதிமுக திட்டத்திற்கு ஸ்டாலின் அரசு மூடுவிழா.. CV.சண்முகத்தை களமிறக்கிய எடப்பாடி.. திண்டிவனத்தில் தரமான சம்பவம்.
அம்மா பல்கலைகழகத்தை மூடி மாணவர்களின் கல்வியில் மண்ணைப்போட்ட திமுக அரசு தற்போது கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி மக்களின் மக்களை குடிநீருக்கு கையேந்த வைத்துள்ளது என திமுக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க
இது என் நண்பன் படித்த கல்லூரி.. போகும் இடமெல்லாம் உதய் புராணம் பாடும் அன்பில் மகேஷ்.. கடுப்பில் ஸ்டாலின்.?
இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி அதனால்தான் நான் இந்த கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போகுமிடமெல்லாம் உதயநிதி என் நண்பன், எங்களது நட்பு ஆழமானது அப்படி இப்படி என தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் படிக்க
ஓபிஎஸ் உடன் இயக்குநர் பாக்கியராஜ் சந்திப்பு.. அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை.
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து உரையாற்றிய பாக்கியராஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க
அதிபர் நினைப்பில் எடப்பாடி.. அதிமுகவை பட்டாபோட்டு தராச் செல்லி அடம்பிடிக்கிறார். மருது அழகுராஜ்.
அதிமுக என்னும் கட்சியை காப்பாற்ற ஒபிஎஸ் பின்னால் தொண்டர்கள் அணிவகுக்க வேண்டும் என மருது அழகுராஜ் வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
திமுகவை டேமேஜ் பண்ண அதிமுக தேவையில்ல... கே.என் நேரு போதும்போல.. திராவிட மாடலை கழுவி ஊற்றிய நாராயணன் திருப்பதி..
திமுக ஆட்சியில் காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஒரே வரிகள் சொல்லிவிட்டார் கே. என் நேரு என்றும், வெள்ளந்தியாக பேசுவதாக எண்ணி திமுகவின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றியிருக்கிறார் அவர் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
"மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சியை பிடிக்க போகிறார் ".. திமுக கோட்டையில் வெடி வைத்த ஜெயக்குமார்.
ஆந்திராவில் நடந்ததைப் போல மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப் போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கப் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினையும் அவரது மருமகன் சபரீசனையும் கருத்திக் கொண்டே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
மது போதையில் பெற்ற மகள்களையே.. ஒரு தந்தை செய்யுற காரியமா இது? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
தந்தையே மது போதையில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பேய் ஓட்டுகிறேன், 13 வயது சிறுமி & தம்பிக்கு நேர்ந்த விபரீதம் - மதபோதகர் செய்த வெறிச்செயல் !
பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியையும், அவளது தம்பியையும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 2030க்குள் 6ஜி வருது - பிரதமர் வெளியிட்ட சூப்பர் தகவல் !
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் தான் கடும் போட்டிகளுக்கு நடுவே 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி சேவையை தனக்கு சொந்தமாக்கியுள்ளது.
“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை, பாஜக விலைக்கு வாங்கச் செயல்பட்டுவருவதாகவும் ஆம் ஆத்மி மட்டத்தில் செய்திகள் வெளிவந்தன.
“அதிமுக முக்கிய பிரமுகர் கடத்தல்.. கொங்கு மண்டலத்தில் பரபரப்பு.! அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்”
அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவையா ? நான் இருக்கும் வரைக்கும் நடக்காது” - கொதிக்கும் சீமான்!
சென்னையில் 2வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இறுதி சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !
மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் உள்ள சலினாஸ் டி ஹில்டால்கோ என்ற மருத்துவமனையில் தான், இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
‘மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம்' என்று கூறப்பட்டது.
விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தொகுப்பாளர் ரக்ஷன், தொகுப்பாளினி டிடி, இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, பாடகி ராஜ லட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் படிக்க