விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?
BiggBoss Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொள்ள இதுவரை 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சியை பற்றி சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், முன் பின் தெரியாத 16 பிரபலங்களை ஒரே வீட்டில் அடைத்து வைத்து, அதில் ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைந்த ஓட்டுக்களை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இவற்றையெல்லாம் கடந்த 100 நாட்கள் யார் அந்த வீட்டில் தாக்குபிடிக்கிறார்களோ அவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஜிபி முத்து, ஸ்ரீநிதி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும், அதை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அவர்களின் கெரியர் அமைந்திருக்கும். உதாரணத்துக்கு இதன் முதல் சிசனில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் ஓவியா, ஆனால் அந்த பாப்புலாரிட்டியை அவர் சரிவர பயன்படுத்த தவறியதால் அவர் தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு... திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்? - வெளியான பரபரப்பு தகவல்
ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா
அதேபோல் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆரி ஆகியோர் இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர். பலரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளன. விரைவில் 6-வது சீசனும் தொடங்க உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் பொதுமக்களில் இருந்தும் ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆடிஷனும் நடைபெற உள்ளது.
ராஜலட்சுமி, டிடி, ரக்ஷன்
இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தொகுப்பாளர் ரக்ஷன், தொகுப்பாளினி டிடி, இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, பாடகி ராஜ லட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வருகிற அக்டோபர் 2-ந் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... குட்டை டவுசர்...கழட்டி விட்ட கோட்.. பக்கா கிளாமர் போஸ் கொடுத்த த்ரிஷா