பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு... திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்? - வெளியான பரபரப்பு தகவல்
Bharathiraja : தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் பல முத்தான திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாரதிராஜா. இவர் சமீப காலமாக படம் இயக்காவிட்டாலும், படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்து அசத்தினார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பாரதிராஜா. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களமிறங்கும் கிளாமர் குயின்ஸ்... அந்த 2 கவர்ச்சி நாயகிகள் யார் தெரியுமா?
தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவர் அஜீரணக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர் விரைவில் நலம்பெற வேண்டி ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா குறித்து சசிகலா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், அன்பு சகோதரர் திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
கலைத்துறையில் தனது தனித்துவமான பங்களிப்பை தொடர்ந்து ஆற்றுகின்ற வகையில், அன்பு சகோதரர் திரு.பாரதிராஜா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் விரைவில் பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Selvaraghavan's Bakasuran First Look : பகாசூரனாக செல்வராகவன்... வெளியானது முதல் பார்வை ...