திமுகவை டேமேஜ் பண்ண அதிமுக வேண்டாம்... கே.என் நேரு போதும் .. திராவிட மாடலை கழுவி ஊற்றிய பாஜக நாராயணன்.
திமுக ஆட்சியில் காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஒரே வரிகள் சொல்லிவிட்டார் கே. என் நேரு என்றும், வெள்ளந்தியாக பேசுவதாக எண்ணி திமுகவின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றியிருக்கிறார் அவர் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில் காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஒரே வரிகள் சொல்லிவிட்டார் கே. என் நேரு என்றும், வெள்ளந்தியாக பேசுவதாக எண்ணி திமுகவின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றியிருக்கிறார் அவர் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
திமுக அமைச்சர்களிலேயே தனி ரகம் கே.என் நேரு, எதையும் வெளிப்படையாக பேசி விடுவார், நிதானம் இல்லாதவர் என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது, இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை அவர் அதட்டலாக பேசியது சர்ச்சையானது, பின்னர் பிரியா எனது மகள் போன்றவர் அந்த உரிமையில் பேசி விட்டேன் என அவர் விளக்கம் கொடுத்தார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்து அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதையும் படியுங்கள்: "மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சியை பிடிக்க போகிறார் ".. திமுக கோட்டையில் வெடி வைத்த ஜெயக்குமார்.
முழு விவரம் பின்வருமாறு:- திருச்சி தனியார் ஐஏஏஸ் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், அங்கு அமர்ந்திருந்த திருச்சி மாவட்டம் ஜீயபுரம் டிஎஸ்பி வாசு தேவனை பார்த்து, இதோ இவர் எனக்கு செக்யூரிட்டி எஸ்.ஐஆக் இருந்தவர், பல்வேறு பணி நிலைகளை அடைந்து தற்போது டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார், இவரின் திறமை என்னவென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர், ஒரு டிஎஸ்பி நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி ஆக்கலாம்,
இதையும் படியுங்கள்: திமுக அரசு இந்த விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டது... குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு!!
குற்றவாளியையும் விடுவிக்கலாம், அவர் எங்களுடன் வளர்ந்தவர் அதனால் அவரைப் பற்றி அதிகம் கூற முடியாது என்றார், அவரின் பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி சிரித்தனர், அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது, பலரும் அமைச்சரின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர், தமிழ்நாடு போலீஸ் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் பேச்சே சான்று என்றும் கூறிவருகின்றனர். நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கே. என் நேரு பேச்சு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று வந்திருப்பவர் ஒருவர் குற்றவாளி ஆக்கவும் முடியும், குற்றவாளியை பட்டியலில் இருந்து நீக்கவும் முடியும், அவர் எங்களுடன் வளர்ந்தவர் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு கூட்டமொன்றில் பேசியுள்ளார், எந்த லட்சணத்தில் காவல்துறை செயல்படுகிறது என்பதை ஒரே வரியில் நேரு கூறிவிட்டார், திமுக ஆட்சியில் காவல்துறை எப்படி சீரழிந்தது என்ற வரலாற்றை சுருக்கமாக கூறி விட்டார், பேசும்போது கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது, இதுதான் திராவிட மாடலின் அவலம், வெள்ளந்தியாக பேசுவதாக நினைத்து தங்களது வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விட்டார் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.