"மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சியை பிடிக்க போகிறார் ".. திமுக கோட்டையில் வெடி வைத்த ஜெயக்குமார்.
ஆந்திராவில் நடந்ததைப் போல மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப் போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கப் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆந்திராவில் நடந்ததைப் போல மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப் போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கப் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினையும் அவரது மருமகன் சபரீசனையும் கருத்திக் கொண்டே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
சென்னை தங்க சாலையில் நடைபெற்று வரும் நாகாத்தம்மன் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார், அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:- சிறிய அளவில் மழை பெய்தால் கூட சென்னையில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது, மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் சாலையில் அதிகம் போக்குவரத்து நெரிசல் உள்ளது, வடிகால் பணி நடைபெறும் இடங்களில் மாற்றுப்பாதைக்கான பதாகைகளை கூட வைக்காமல் போலீசார் மெத்தனமாக உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை, தற்போது அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது, அதுமட்டுமின்றி மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது,
இதையும் படியுங்கள்: திமுக அரசு இந்த விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டது... குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு!!
அதிமுக காலத்தில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களும் சீராக பராமரிக்கப்படவில்லை, அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்ற திமுகவின் ஈகோவால் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்களை செயல்படுத்தாமல் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது, ராயபுரம் தொகுதியை பொறுத்தவரையில் இங்குள்ள எம்எல்ஏ பெயரளவுக்குதான் ஒரு எம்எல்ஏ வாக இருக்கிறார், தொகுதியில் எந்த பணியும் அவர் செய்வதில்லை,
இதையும் படியுங்கள்: திமுகவை டேமேஜ் பண்ண அதிமுக வேண்டாம்... கே.என் நேரு போதும் .. திராவிட மாடலை கழுவி ஊற்றிய பாஜக நாராயணன்.
ஆனால் ஒசியில் சம்பளம் வாங்குகிறார், எடப்பாடி பழனிச்சாமி சட்டம் ஒழுங்கு சீர்கேடாகிவிட்டது என்பதைக் குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு டிஜிபி அலுவலத்தில் இருந்து ஒரு மொட்டை கடுதாசி வெளிவந்துள்ளது, குற்றங்களை மறைப்பதற்குதான் காவல் துறை செயல்பட்டு வருகிறது,
காவல்துறை மு.க ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாகி விட்டது, அதேபோல ஆந்திராவில் நடந்த நிகழ்வு போலவே மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப் போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது.
தமிழகத்தில் ஹிட்லர் அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, விடியா அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் குற்றவாளிகளுக்கு பயம் பட்டுப்போய்விட்டது, சிசிடிவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, என அவர் கூறினார்.