திமுக அரசு இந்த விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டது... குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாக நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார். 

khushbu slams dmk govt regarding womens safety

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாக நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கடந்த 23 ஆம் தேதி இரவு புறப்பட்ட மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் போதை ஆசாமி ஒருவர் ஏறி உட்கார்ந்து இருப்பதை தட்டிக்கேட்ட ரெயில்வே பெண் போலீஸ் ஆசிர்வாவை அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் தனது உயிரை தற்காத்து கொள்ள ஓடும் ரெயிலில் கீழே குதித்த ஆசிர்வா, ரத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெண் போலீசை கத்தியால் குத்திய நபர் ரெயிலில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சி பதிவு ஒன்று வெளியானது.

இதையும் படிங்க: விளம்பரம் தேடாமல் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துங்கள்... மு.க.ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ அறிவுறுத்தல்!!

அதில், ரெயில்வே பெண் போலீஸ் ஆசிர்வா, கத்திகுத்து காயங்களுடன் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தண்டவாளத்தில் குதித்து, பின்னர் உடனடியாக ரெயில் நிலைய நடைமேடையை நோக்கி ஓடிவரும் காட்சி பதிவாகியுள்ளது. எழும்பூர் ரெயில்வே போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பெண் போலீஸ் ஆசிர்வாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய தனசேகர் என்பவரை எழும்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிபர் நினைப்பில் எடப்பாடி.. அதிமுகவை பட்டாபோட்டு தரச் சொல்லி அடம்பிடிக்கிறார். மருது அழகுராஜ்.

ரயில் நிலையத்தில் சீருடைகள் இருந்த பெண் காவலருக்கு நடந்த இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாக நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பெண்களுக்கு பாதுக்காப்பு வழங்குவதில் முதல்வர் ஸ்டாலின் அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு பெண் போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios