விளம்பரம் தேடாமல் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துங்கள்... மு.க.ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ அறிவுறுத்தல்!!
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒன்றும் பேசி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். மக்களை கவனிக்கவில்லை. அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
இதையும் படிங்க: அதிபர் நினைப்பில் எடப்பாடி.. அதிமுகவை பட்டாபோட்டு தரச் சொல்லி அடம்பிடிக்கிறார். மருது அழகுராஜ்.
எடப்பாடியார் தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சிங்கமாக செயல்படுவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்கும்போது பணிந்து செயல்படுகிறார்.
இதையும் படிங்க: “ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”
முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும். தரம் குறைந்து பேசும் அரசியல்வாதிகள் நீடித்து செயல்பட்டதில்லை, 2026ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும், 2026ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும், 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்று தெரிவித்தார்.