“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை, பாஜக விலைக்கு வாங்கச் செயல்பட்டுவருவதாகவும் ஆம் ஆத்மி மட்டத்தில் செய்திகள் வெளிவந்தன.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில், மாநில கலால் கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் பா.ஜ.கவைச் சாடிவந்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில், ஆம் ஆத்மியைவிட்டு வெளியேறினால் தன்மீதான அனைத்து வழக்குகளையும் நீக்குவதாகவும், பா.ஜ.க தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவிருப்பதாகவும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டிவந்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை, பா.ஜ.க விலைக்கு வாங்கச் செயல்பட்டுவருவதாகவும் ஆம் ஆத்மி மட்டத்தில் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் நேற்று தன்னுடைய இல்லத்தில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தினார்.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
ஆம் ஆம்தி எம்எல்ஏக்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் தாங்கள் தொலைபேசி வாயிலாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார். தங்கள் எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்னாத் பாரதி, குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் அணுகியுள்ளனர். அவர்களை பாஜகவில் சேரக் கூறி ரூ.20-25 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
இதை நாங்கள் எதிர்கொள்ளத் தயார். குஜராத் தேர்தல் வரை இதுபோன்ற ரெய்டு, மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ ஆம் ஆத்மி கட்சியை உடைக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கும் தலா 25 கோடி ரூபாய் பேரம் பேசிய பாஜகவின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. இதற்கான பணம் 800 கோடி ரூபாய் பாஜக வுக்கு எங்கிருந்து வந்தது என்பது தான் எனது கேள்வி ? எனவே எனது கட்சி கூட்டத்தை அவசரமாக கூட்ட உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு
மேலும் பேசிய அவர், ‘ இதுவரை சுமார் 277 எம்.எல்.ஏக்கள் பாஜக கட்சிக்கு வந்துள்ளனர் என்று கணக்கிட்டு பார்த்தால், இப்போது ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.20 கோடி கொடுத்தால், ரூ.5,500 கோடிக்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது. அதனால்தான் பணவீக்கம் அதிகரித்து, சாமானியர்களை விலை கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள்’ என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !