“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 55,000 பேர் திமுகவில் இணைந்தனர்.

55000 cadres including Aarkutty Dinakara Mythili joined DMK today at kovai

கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் தங்கி இருந்து நலத்திட்ட பணிகளை முடுக்கி விடுவதுடன் , நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். 

55000 cadres including Aarkutty Dinakara Mythili joined DMK today at kovai

மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 55,000 பேர் திமுகவில் இணைந்தனர். இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்து கொண்ட முன்னாள் பாஜக உறுப்பினர் மைதிலி வினோவை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்த முன்னாள் தேமுதிக எம்எல்ஏ தினகரனுக்கு நன்றி. உங்களின் வரவு திமுகவிற்கு பலம் சேர்க்கும். 

2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 39லும் வெற்றிபெறுவோம். இங்கு உள்ள 55 ஆயிரம் பேரும் தலைக்கு தலா 10 வாக்குகளை நம் பக்கம் கொண்டு வர வேண்டும். இதை டார்கெட்டாக வைத்து செயல்பட வேண்டும்' என்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜிதான். பிற கட்சிகளில் இருந்து தொண்டர்களை யார் வேண்டுமானாலும் இழுத்து வரலாம். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு : முடியவே முடியாது.. எச்சரித்த நீதிமன்றம் - மீண்டும் பரபரப்பு

55000 cadres including Aarkutty Dinakara Mythili joined DMK today at kovai

ஆனால் 55,000 நபர்களை இழுத்து, திமுகவிற்குள் சேர்த்து தன்னுடைய மாஸ் இமேஜை மீண்டும் நிரூபித்து உள்ளார். அதிலும் அதிமுக, பாஜக,தேமுதிகவை சேர்ந்த முக்கிய நபர்களை இழுத்து வந்து திமுக தலைமைக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த ஆறுகுட்டி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார். 

இவர், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். மேலும் அவரைத் தொடர்ந்து தேமுதிகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் தினகரனும் திமுகவில் இணைந்தார்.  அதிமுகவின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அபிநயா, பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி ஆகியோரும் சேர்ந்து உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios