வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
‘மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம்' என்று கூறப்பட்டது.
தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்குகள் பதிவு செய்வதை தடுக்க இந்த பிரச்சாரம் உதவும்என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு லோக்சபாவில், தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்றாலும், வாக்காளர் விருப்பத்தின்பேரில் இணைத்துக் கொள்ளலாம். வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் இது தொடர்பான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு
அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு மக்களுக்கு உதவுவார்கள். இது தவிர, மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம்' என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், '6பி' படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதுமட்டுமின்றி, ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ‘நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் ‘6பி’ படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘என்விஎஸ்பி போர்ட்டல்’ (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் ‘1950’ போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.
‘6பி’ படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!