MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. தமிழக அரசு முக்கிய வார்னிங்!

வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. தமிழக அரசு முக்கிய வார்னிங்!

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

2 Min read
Author : Rayar r
Published : Mar 19 2026, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்
Image Credit : Asianet News

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் கொழுத்தியெடுக்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு அனலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலுக்கு பெயர்போன வேலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

23
பகலில் வெளியே போகாதீங்க‌
Image Credit : our own

பகலில் வெளியே போகாதீங்க‌

இந்த நிலையில், தமிழகத்தில் சூரியன் சுட்டெரித்து வருவதால் மக்கள் பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது என கூறியுள்ளது.

தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்

வெட்டவெளியில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், நண்பகல் வேளையில் கடினமான பணிகளைச் செய்வதைத் தவிர்த்து ஓய்வெடுப்பது அவசியம். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே செல்ல நேர்ந்தால், காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியுங்கள். சூரிய ஒளியிலிருந்து காத்துக்கொள்ள குடை, தொப்பி மற்றும் தற்காப்புக் கண்ணாடிகளை (Sunglasses) மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
தமிழகத்தில் போட்டுத்தாக்கும் வெயில்.. இந்த 3 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க.. வானிலை மையம் வார்னிங்!
Related image2
மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!
33
இளநீர், நுங்கு பருகுங்கள்
Image Credit : freepik

இளநீர், நுங்கு பருகுங்கள்

மேலும் அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, அதன் விளைவாக வாந்தி, சோர்வு அல்லது தலைச்சுற்றல் ஏற்படக்கூடும் எனவும் காபி, தேநீர், மதுபானங்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ரசாயனக் குளிர்பானங்களை தவிர்த்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இளநீர், நுங்கு மற்றும் சத்தான பழச்சாறுகளை அதிக அளவில் பருகலாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் வெயில் எப்படி?

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
வானிலை அறிக்கை
வெப்ப அலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி..? மாணவி கொலையில் சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை
Recommended image2
மூன்று மாவட்டங்களில் முரட்டு தனமாக ஊத்தப்போகும் மழை.. அப்படினா.. சென்னையின் நிலவரம் என்ன?
Recommended image3
நம்பவே முடியல! இத்தனை டிகிரியா..? எடப்பாடி பழனிசாமியும், உதயநிதியும் இவ்வளவு படிச்சிருக்காங்களா..?
Related Stories
Recommended image1
தமிழகத்தில் போட்டுத்தாக்கும் வெயில்.. இந்த 3 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க.. வானிலை மையம் வார்னிங்!
Recommended image2
மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved