MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!

மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!

TN Rain: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 03 2026, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாட்டி வதைக்கும் வெயில்
Image Credit : ANI

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கடும் பனிபொழிவு நிலவி வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனிபொழிவும், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 07 முதல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : our own

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?
Related image2
தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி
35
மார்ச் 7ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

மார்ச் 7ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு

அதேபோல் மார்ச் 07 முதல் 09ம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் கணித்துள்ளது.

45
பனிபொழிவு எச்சரிக்கை
Image Credit : our own

பனிபொழிவு எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

55
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Asianet News

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்தில் துண்டு போட்டு காசு வாங்கிய திமுக எம்.எல்.ஏ..! ED -யிடம் சிக்கிய வாட்ஸ்-அப் ஆடியோ..!
Recommended image2
எந்த அளவுக்கு போதை நடமாட்டம் இருக்கு பாருங்க ஸ்டாலின்! வெளிச்சம் போட்டு காட்டும் இரட்டை கொலை சம்பவம்! விடாத L.முருகன்
Recommended image3
கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?
Recommended image2
தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved