கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. முதல்வரை சந்திக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் - அதிரடி திருப்பம்
ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என மாணவியின் தாய் எதிர்ப்பு தெரிவித்தார். சிபிசிஐடி போலீசாரும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்ரீமதியின் தாய், ஜாமீனில் தான் வெளியே வந்திருக்கிறார்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்து வெளியே வரவில்லை. அவர்கள் தான் குற்றவாளி என்று நிரூபிப்பேன்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
இந்த நிலையில் நாளை காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர் பெரிய நெசலூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி, வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மகன் வெங்கடேஸ்வரன், கடலூர் மாவட்ட உழவு பிரிவு ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் இரண்டு கார்களில் இன்று 2.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் நாளை முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”