- Home
- Tamil Nadu News
- முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Main Exam Training: இந்திய வனப்பணி முதன்மைத் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு பயிற்சி மையத்தில் வரும் 17ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

வனப்பணி முதன்மைத் தேர்ச்சி
அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது லட்சியம் கனவாக இருந்து வருகிறது. இதற்கான பல லட்சம் இளைஞர்கள் மத்திய, மாநில அரசு தேர்வுக்கு இரவு, பகல் பாராமல் படித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் இந்திய வனப்பணி முதன்மைத் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு பயிற்சி மையத்தில் வரும் 17-ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை
தற்போது, இம்மையத்தின் சார்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்களுக்கு வருகின்ற மார்ச் 17ம் தேதியன்று மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், இன்று முதல் மார்ச் 15 (மாலை 5 மணி) வரை www.civilservice coaching.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மார்ச 15 கடைசி நாள்
விண்ணப்ப விவரங்களை (DAF) அவசியம் பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மார்ச் 15 மாலை 5.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

