MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 5 நிமிடத்தில் ரேஷன் கார்டு மாற்றம் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தேதி குறித்த தமிழக அரசு!

5 நிமிடத்தில் ரேஷன் கார்டு மாற்றம் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தேதி குறித்த தமிழக அரசு!

Ration Card: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 12 2026, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மானிய விலையில் உணவு பொருட்கள்
Image Credit : our own

மானிய விலையில் உணவு பொருட்கள்

ஏழை எளிய மக்களின் பயனடையும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

25
அரசின் திட்டங்கள் பெற ரேஷன் கார்டு கட்டாயம்
Image Credit : our own

அரசின் திட்டங்கள் பெற ரேஷன் கார்டு கட்டாயம்

ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை பெற முடியும். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும். இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியால் பொதுமக்கள் அலைந்து வருகின்றனர்.

Related Articles

Related image1
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! டிஜிட்டல் ஸ்டுடியோ ஸ்டார்ட்-அப் ! 5 நாட்களில் நீங்களும் தொழிலதிபராகலாம்.!
Related image2
தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
35
குடும்ப அட்டைகள் திருத்தம்
Image Credit : our own

குடும்ப அட்டைகள் திருத்தம்

அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

45
ரேஷன் கார்டில் திருத்தம்- சிறப்பு முகாம்
Image Credit : Google

ரேஷன் கார்டில் திருத்தம்- சிறப்பு முகாம்

அதன்படி மார்ச் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.03.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

55
முகவரி, பெயர் திருத்தம்
Image Credit : our own

முகவரி, பெயர் திருத்தம்

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
Recommended image2
Now Playing
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
Recommended image3
Now Playing
என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
Related Stories
Recommended image1
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! டிஜிட்டல் ஸ்டுடியோ ஸ்டார்ட்-அப் ! 5 நாட்களில் நீங்களும் தொழிலதிபராகலாம்.!
Recommended image2
தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved