MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

School Student: பள்ளி பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் முறையற்ற வழிகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 12 2026, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
12ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : our own

12ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் நேற்று முதல் 10ம் வகுப்பு தேர்வு தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நெல்லையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பல்வேறு தேர்வு மையங்களில் மாணவர்களிடம் 'மினி ஜெராக்ஸ்' கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

24
தேர்வுத்துறை அதிரடி உத்தரவு
Image Credit : Google

தேர்வுத்துறை அதிரடி உத்தரவு

மாணவர்கள் பிட் அடிக்கும் நோக்கத்தில் மினி ஜெராக்ஸ் போட்டு அதனை சட்டை பையில் மறைத்து வைத்து தேர்வு எழுத சென்றுள்ளனர். மாணவர்களிடம் விசாரித்ததில், ஜெராக்ஸ் கடையில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்த ஜெராக்ஸ் கடைக்கு நேரடியாக சென்று எச்சரிக்கையும் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்கு அருகே செயல்படும் ஜெராக்ஸ் கடைகளைத் தீவிரமாக கண்காணிக்க தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Related image1
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! டிஜிட்டல் ஸ்டுடியோ ஸ்டார்ட்-அப் ! 5 நாட்களில் நீங்களும் தொழிலதிபராகலாம்.!
Related image2
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை! என்னென்ன சிறப்பு அம்சங்கள்.. எந்தெந்த வழித்தடம்? முன்பதிவு செய்வது எப்படி?
34
ஜெராக்ஸ் கடைகள்
Image Credit : Asianet News

ஜெராக்ஸ் கடைகள்

பள்ளி பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் முறையற்ற வழிகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வு வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் ஜெராக்ஸ் கடைகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் மினி ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

44
மினி ஜெராக்ஸ்
Image Credit : Asianet News

மினி ஜெராக்ஸ்

இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்குத் தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டுதலில், தேர்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் திடீர் சோதனைகளை நடத்தவும், அங்கு பிட் அடிப்பதற்கு ஏதுவாக மினி ஜெராக்ஸ் எடுப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் கால்களில் 14 கிமீ..! அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய அணி வீரர்கள்..
Recommended image2
Now Playing
பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
Recommended image3
Now Playing
டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
Related Stories
Recommended image1
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! டிஜிட்டல் ஸ்டுடியோ ஸ்டார்ட்-அப் ! 5 நாட்களில் நீங்களும் தொழிலதிபராகலாம்.!
Recommended image2
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை! என்னென்ன சிறப்பு அம்சங்கள்.. எந்தெந்த வழித்தடம்? முன்பதிவு செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved