MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! டிஜிட்டல் ஸ்டுடியோ ஸ்டார்ட்-அப் ! 5 நாட்களில் நீங்களும் தொழிலதிபராகலாம்.!

இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! டிஜிட்டல் ஸ்டுடியோ ஸ்டார்ட்-அப் ! 5 நாட்களில் நீங்களும் தொழிலதிபராகலாம்.!

தமிழக அரசு சார்பில் தொழில் முனைவோருக்கான திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் புகைப்படம் எடுத்தல், எடிட்டிங் குறித்து கற்றுத்தரப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 12 2026, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வேலை வாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு
Image Credit : Asianet News

வேலை வாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு

வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் துறை மூலம் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடக்க விரும்புபவர்களுக்காக பேக்கரி தொழில் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, ட்ரோன் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்நிலையில் 5 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி மற்றும் மானியங்கள் ஆகியவை குறித்து விளக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25
திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி
Image Credit : our own

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 23 முதல் 27 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

Related Articles

Related image1
ஒருவர் வீட்டில் எவ்வளவு மதுபானங்களை வைத்திருக்கலாம்.. கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க! தமிழ்நாட்டில் எவ்வளவு?
Related image2
நாளை முதல் 15ம் தேதி வரை உஷார் மக்களே.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
35
அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள்
Image Credit : Asianet News

அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள்

இப்பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, பாரம்பரிய புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், திருமண உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள், உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, திருமண புகைப்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது புகைப்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

45
 கல்வித் தகுதி
Image Credit : our own

கல்வித் தகுதி

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

55
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : our own

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.8668102600 / 8754495254 . முன்பதிவு அவசியம் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
தமிழ்நாடு அரசு
திருமண ஒளிப்படவியல் பயிற்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
SSLC English Exam: 90+ மதிப்பெண் பெற 'டாப்பர்ஸ்' கடைபிடிக்கும் சீக்ரெட் டிப்ஸ்..
Recommended image2
10 நிமிடத்திற்கு ஒருமுறை.. சென்னையே மாறப்போகுது.. மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
Recommended image3
மாணவியைச் சிதைத்த காமக் கொடூரர்கள்: புகாரை மதிக்காத காவல்துறை... மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
ஒருவர் வீட்டில் எவ்வளவு மதுபானங்களை வைத்திருக்கலாம்.. கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க! தமிழ்நாட்டில் எவ்வளவு?
Recommended image2
நாளை முதல் 15ம் தேதி வரை உஷார் மக்களே.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved