MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

Free Bus Pass: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள் புதிய பஸ் பாஸ் பெறும் வரை சீருடை அல்லது அடையாள அட்டை காண்பித்து அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 30 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
Image Credit : Google

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அதாவது முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 16ம் தேதி முடிவடைந்ததை அடுத்து ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயில் கடுமையாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம்
Image Credit : Asianet News

பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம்

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 04.06.2026 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், 2026-27 கல்வியாண்டில் மாணவர் / மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Related Articles

Related image1
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Related image2
Government Employees: இரட்டிப்பு மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! வெளியான சூப்பர் அறிவிப்பு! உடனே அக்கவுண்டை செக் பண்ணுங்க!
34
கல்லூரி மாணவர்கள்
Image Credit : Asianet News

கல்லூரி மாணவர்கள்

அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.

44
நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள்
Image Credit : Asianet News

நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள்

மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ மற்றும் மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
தமிழ்நாடு
பள்ளிகள் விடுமுறை
பள்ளிக் கல்வித் துறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cauvery Calling: 13 கோடி மரங்கள் நட்டு 'காவேரி கூக்குரல்' சாதனை! வறண்ட நிலத்திலும் விவசாயிகளுக்கு வருமான மழை!
Recommended image2
TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!
Recommended image3
TVK Vijay: அல்லக்கைகளை தவிருங்கள்! கிண்டல்.. கேலி.. விமர்சனங்களும் இருக்கும்! தவெகவுக்கு ஜெ.நிழல் கொடுத்த சூப்பர் அட்வைஸ்!
Related Stories
Recommended image1
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Recommended image2
Government Employees: இரட்டிப்பு மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! வெளியான சூப்பர் அறிவிப்பு! உடனே அக்கவுண்டை செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved