MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!

TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!

TN Rain Alert: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 29 2026, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Image Credit : Asianet News

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டுகிறது. இடையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்த நிலையில், மற்ற இடங்களில் வெயில் கடுமையாக கொளுத்தியது. இதனால் மழை பெய்யதா? வெப்பம் தணியாதா? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்த நிலையில், மே 1ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பல்வேறு மாவட்டங்களில் கனமழை
Image Credit : Asianet News

பல்வேறு மாவட்டங்களில் கனமழை

அதாவது மே 29ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 30ம் தேதி திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க!
Related image2
தமிழக வானிலையில் திடீர் திருப்பம்! இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
34
கோவை, திண்டுக்கல்
Image Credit : Asianet News

கோவை, திண்டுக்கல்

மே 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதியில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தர்மபுரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 2ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே போல் ஜூன் 3ம் தேதி மற்றும் 4ம் தேதியில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

44
சென்னையில் எப்படி?
Image Credit : Asianet News

சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானிலை அறிக்கை
மழை செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Vijay: அல்லக்கைகளை தவிருங்கள்! கிண்டல்.. கேலி.. விமர்சனங்களும் இருக்கும்! தவெகவுக்கு ஜெ.நிழல் கொடுத்த சூப்பர் அட்வைஸ்!
Recommended image2
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Recommended image3
Crime: 26 வயது மருமகள் மீது ஆசை! 66 வயது மாமனார் செய்த வேலையை பாருங்கள்! விசாரணையில் அதிர்ச்சி
Related Stories
Recommended image1
TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க!
Recommended image2
தமிழக வானிலையில் திடீர் திருப்பம்! இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved