- Home
- Tamil Nadu News
- தமிழக வானிலையில் திடீர் திருப்பம்! இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழக வானிலையில் திடீர் திருப்பம்! இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamilnadu Weather Update: தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயில் பொதுமக்களை கதறவிட்டு வருகிறது. நேற்று சென்னை, ஈரோடு, கரூர், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வெயில் சதம் அடித்தது. வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் அவ்வப்போது ஒருசில இடங்களில் கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை அரபிக்கடல் குமரிக்கடல் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை
அதாவது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை
அதேபோல் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மே 25ம் தேதி வானிலை நிலவரம்
மே 25ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

