Asianet News TamilAsianet News Tamil

லைகாவுக்கு 21 கோடி கடன் பாக்கி.. சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சொல்லி நடிகர் விஷாலுக்கு ஆப்பு.

லைக்கா நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

Actor Vishal asked to submit 21 crore debt to Laika.. Court Ask property details.
Author
Chennai, First Published Aug 26, 2022, 4:03 PM IST

லைக்கா நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் முன்னணி ஆக்சன்  நடிகர்களில் ஒருவராக உள்ளார் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனமான விஷால்  பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புகாக தயாரிப்பாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றார், பின்னர் அந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொள்ளவதாக தெரிவித்ததுடன், அவர் கடன் தொகையை தங்கள் நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தும் வரை நடிகர் விஷாலின் அனைத்து  படங்களில் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என அந்நிறுவனம் விஷாலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

Actor Vishal asked to submit 21 crore debt to Laika.. Court Ask property details.

ஆனால் இதுவரையில் விஷால் முழுமையாக அக்கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிகிறது, இந்நிலையில்  தங்களுக்கு வழங்க வேண்டி 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல் ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முன்றதாக தெரிகிறது, இந்நிலையில் அப்படத்தில்  தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில்  சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைக்கு தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை தலைமை பதிவாளர் வங்கி கணக்கில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் டெபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்பு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது விஷால் ஆஜரானார், ஏற்கனவே 15 கோடி  ரூபாயை தலைமை பதிவாளர் வங்கிக் கணக்கில் வைப்பு வைக்க வேண்டும் என உத்தரவிட்டும் ஏன் அதை அமல்படுத்தவில்லை என விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர், லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், அதுக்கு மட்டுமே தான் வட்டி கட்டி வருவதாகவும், இத் தொகையை ஆறு மாதங்கள் ஆனாலும் செலுத்த இயலாது என்றும் தெரிவித்தார்,

Actor Vishal asked to submit 21 crore debt to Laika.. Court Ask property details.

மேலும், ஒரு படத்தை எடுக்க படாதபாடுபட்டு வரும் நிலையில், கடைசி நேரத்தில் அப்படத்திற்கு அவர்கள் தடை கேட்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார், அப்போது குறுக்கிட்ட லைகா தரப்பு வழங்கறிஞர், தொடர்ந்து லைக்கா நிறுவனத் தயாரிப்புகளில் விஷால் படம் நடித்து வரும் நிலையில், விஷால் தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், வங்கிக் கணக்கு விவரங்களை அவர்கள் தாக்கல் செய்யட்டும் என்றும் வலியுறுத்தினர்,

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தொடர்ந்து படங்களில் நடிக்கிறார் என்றால் பணத்தை திருப்பி  செலுத்தலாமே என்றும், இத்துடன் திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என கூறுகிறீர்களா என விஷாலிடம் கேள்வி எழுப்பினார், அதற்கு அவர், சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என கூற வரவில்லை, நஷ்டம் ஏற்பட்டுள்ளது  அதை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட நீதிபதி விஷாலின் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்  பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார், மேலும் வழக்கு விசாரணை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன்  அன்றைய தினமும் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios