கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 2030க்குள் 6ஜி வருது - பிரதமர் வெளியிட்ட சூப்பர் தகவல் !
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் தான் கடும் போட்டிகளுக்கு நடுவே 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி சேவையை தனக்கு சொந்தமாக்கியுள்ளது. மேலும், நாட்டில் எப்போது 5ஜி சேவை அறிமுகமாகும் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், 5ஜி ஜியோ போனும் வரையறுக்கப்பட்ட டேட்டா வசதி மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
மேலும், இத்தகைய வசதிகளை கொண்ட ஜியோ போன் 5ஜியின் விலை ரூ.12,000 இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழாவின் போது செப்டம்பர் 29 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5G சேவையை அறிமுகம் செய்வது தொடர்பான வருடாந்திர பொதுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி முகேஷ் அம்பானி தலைமையில் நடைபெற இருக்கிறது.
மேலும், முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மட்டும் 5G சேவையை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கத்தான் நிகழ்வில் பேசிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகமாகும்' என சூசகமாக தெரிவித்திருந்தார். அதோடு அடுத்த இரண்டு ஆண்டுக்குள் இந்தியாவின் நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
பிறகு பேசிய பிரதமர் மோடி, ‘2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கேமிங் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து இந்திய அரசாங்கம் ஊக்குவிப்பு வழங்கி வருகிறது’ என்று பிரதமர் மோடி 6ஜி சேவை குறித்து அசத்தல் தகவலை வெளியிட்டார்.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேசன் லோட்டஸ்.. 277 எம்எல்ஏக்கள், 5,500 கோடி.. பாஜகவை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் !”