“சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவையா ? நான் இருக்கும் வரைக்கும் நடக்காது” - கொதிக்கும் சீமான்!
சென்னையில் 2வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அரசு விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர் பல கிராமங்கள், பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை காலி செய்துவிட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அதாவது 2605 சதுப்பு நிலப்பகுதி நீர்பிடிப்புப் பகுதிகள் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு
அதுமட்டுமின்றி மேலும் 985 நீர்நிலைகள், இவையெல்லாம் காலி செய்துவிட்டு நீங்கள் ஒரு ஏர்போர்ட் கட்டுவதை வளர்ச்சி என்று கூறுகின்றனர். இதில் அமைச்சர் கூறுவது, 2030-35-இல் 10 கோடி மக்கள் பயணிக்கிற அளவுக்கு வசதிகள் வந்துவிடும் என்று சொல்கிறார். 2022-ம் ஆண்டில் தொடங்கி 2028-க்குள் இதை முடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், 2030-35 வாழுகின்ற மக்களின் பயணத் தேவையை நிறைவு செய்ய முடியாது என்று கூறுகிறார்.
இவ்வளவு தொலைநோக்காக சிந்திக்கின்ற உங்களிடம், அப்போது வாழுகின்ற மக்களின் குடிநீர் தேவை, உணவுத் தேவையை நிறைவேற்ற ஏதாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா ? என்று பார்த்தால் இல்லை. மேலும், ஒவ்வொரு முறையும் சென்னை வெள்ளச் சேதத்தை எதிர்கொள்கிறது. கழிவுநீர், மழைநீர் தேக்கமின்றி வழிந்தோட ஏதாவது திட்டம் உள்ளதா ? தலைநகரிலேயே இன்னும் பாதை சரியாக போடவில்லை என்று தெளிவாக தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
தற்போது இருக்கும் சென்னை விமான நிலையத்திலேயே நூறு முறைக்கும் மேலாக கண்ணாடி இடிந்து விழுந்துள்ளது. அதை சரி செய்யாமல், புதிதாக ஏர்போர்ட் கட்டுகிறீர்கள். இதற்கு பெங்களூர், ஹைதராபாத்தை உதாரணமாக கூறுகிறீர்கள். புதிய விமான நிலையத்தால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அடித்தட்டு மக்கள் வளர்ச்சியைடந்துள்ளனர் என்று சொல்ல முடியுமா ?
விளைநிலங்களின் வளங்களே இந்த நாட்டில் மிக குறைவாக இருக்கின்றபோது சாலை அமைப்பது, இதுபோல விமான நிலையம் கட்டுவது, இதற்காக பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை பறிக்கிறீர்கள். ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையில் வேர்வையும் ரத்தமும் சிந்தி இருக்க வேண்டும் .அரசு ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை.
நான் இங்கு இருக்கும் விமான நிலையம் இங்கு அமையாது.திர்க்கட்சியாக இருக்கும் போது எட்டு வழி சாலைகளை எதிர்த்து போராடினீர்களா இல்லையா ?. எட்டு வழி சாலை என்றால் நாங்கள் எதிர்ப்போம் என சொல்லிவிட்டு , பயணம் தூர குறைப்பு சாலை என பெயர் மாற்றி விட்டார்கள்' என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான்.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !