இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: உபியை கதிகலங்க வைத்த டான் அடிக் அகமது என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Asianet Tamil News Live: உபியை கதிகலங்க வைத்த டான் அடிக் அகமது என்கவுன்டரில் சுட்டுக்கொலை

உபியை கதிகலங்க வைத்த டான் அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் பிரயாக்ராஜில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 17ம் தேதி முதல் மாஸ்க் கட்டாயம்.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்
அடேங்கப்பா வாழை மரத்தில் இருந்து கட்டுக்கட்டாக கொட்டிய பணம்.. கேரளாவில் ஷாக் சம்பவம்
சோதனை செய்ய வந்த இடத்தில் வாழை மரத்தில் இருந்து பணம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்தனர் அரசு அதிகாரிகள்.
BREAKING : உபியை கதிகலங்க வைத்த டான் அடிக் அகமது என்கவுன்டரில் சுட்டுக்கொலை - பரபரப்பு சம்பவம்
பிரயாக்ராஜில் அடிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறாரே ? என்ற கேள்விக்கு, அவரைப் பற்றி பேச வேண்டாம் என்று பதில் அளித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பெரியார் பல்கலையில் இந்த படிப்பா? மாணவர்கள் பாவம் - எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்
இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
எங்கள் சொத்து இல்லை என்று திமுக அமைச்சர்கள் சொல்லவே இல்லையே - எகிறி அடிக்கும் அண்ணாமலை
திமுக அமைச்சர்கள் குறித்து நாங்கள் வெளியிட்ட ஊழல் பட்டியலில் இது எங்கள் சொத்து இல்லை என இதுவரை ஒருவர் கூட தெரிவிக்கவில்லை என்று திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்
அண்ணாமலை புகாருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
உலக வங்கி நிகழ்வில் பிரதமர் மோடியை பாராட்டிய லார்ட் நிக்கோலஸ் ஸ்டெர்ன்.!! எதற்கு தெரியுமா.?
உலக வங்கி நிகழ்வில் நிக்கோலஸ் பிரபு பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். விஷயங்களை வித்தியாசமாக கையாள்வதற்கான பிரதமர் மோடியின் கருத்து வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த வழியாக இருக்கிறது என்று கூறினார்.
வெளியே வராதீங்க..சூடானில் வெடித்த வன்முறை..இந்தியர்களுக்கு எச்சரிக்கை - என்ன நடக்கிறது?
துணை ராணுவப் படைகளுடன் ராணுவம் மோதுவதால் சூடானில் உள்ள இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு சிலை வைத்து... ஊர் மக்களின் முக்கிய பிரச்னையை தீர்த்து வைத்த ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பூர்வீக ஊரில், பெற்றோருக்கு சிலை வைத்தது மட்டுமின்றி... அந்த ஊரில் வாழும் மக்களின் முக்கிய பிரச்சனை ஒன்றையும் தீர்த்து வைத்துள்ளார். இதற்கு அந்த ஊர் மக்கள் தங்களின் நன்றிகளை மனம் உருகி தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
உங்க பாச்சா எல்லாம் எங்ககிட்ட பலிக்காது.. முடிஞ்சா ரிலீஸ் பண்ணு - அண்ணாமலைக்கு சவால் விட்ட ஜெயக்குமார்
திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் வெளியிடப் போவதாக கூறி அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளார்.
இதையும் படிங்க..19 வயசு தான் ஆகுது.. கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி அறையில் கருக்கலைப்பு செய்துள்ளார்.
எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி
வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
1500 திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்தவர் பைவ்ஸ்டார் கதிரேசன். இவர் ருத்ரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ருத்ரன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. மேலும் படிக்க
பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதி... தலைவரே என்னாச்சு என பதறிப்போன ரசிகர்கள்
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஜிபி முத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ வெளியானதை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர். மேலும் படிக்க
ஊடகம் இல்லையென்றால் என்ன.. திமுகவின் கோர முகத்தை வெளிக்கொண்டுவர இதுபோதும்.. நாராயணன் திருப்பதி..!
இனி எந்த விவாதத்திற்கு பாஜகவினர் சென்றாலும், இன்றைய ஊழல் ஒழிப்பு பிரகடனம் குறித்து விவாதிக்காதது ஏன் என்பதே நம் முதல் கேள்வி என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
முதல்முறையாக தமிழில் CRPF தேர்வு! முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டிய உள்துறை அமைச்சகம்.!
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மத்திய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை 2024ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்ட்டிக்கு போன இடத்தில் ஐ போனை அபேஸ் பண்ணிட்டாங்க... நண்பர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக ஷாலு ஷம்மு புகார்
நடிகை ஷாலு ஷம்மு கடந்த ஞாயிறன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டிருகிறார். பார்ட்டி முடிந்ததும் சூளைமேட்டில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கினாராம். காலை எழுந்து பார்த்ததும் தன்னுடைய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐபோன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஷாலு ஷம்மு, இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க
சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு காரணமானவர் முதல் சிலுக்கை பயன்படுத்திய நடிகர்கள் வரை.. லிஸ்ட் போட்டு சொன்ன பயில்வான்
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை பயன்படுத்திய நடிகர்களின் லிஸ்ட் ரொம்ப பெருசு என பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை பெரும் தொகை கொடுத்து தட்டித்தூக்கிய முன்னணி நிறுவனம் - அதுவும் இத்தனை கோடியா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளது. மேலும் படிக்க