பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதி... தலைவரே என்னாச்சு என பதறிப்போன ரசிகர்கள்
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஜிபி முத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ வெளியானதை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.
டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. ஒருகட்டத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்டது மட்டுமின்றி ஊரடங்கால் வறுமையில் வாடிய இவர் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த ஜிபி முத்து, யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனக்கு வரும் கடிதங்களை படித்துக்காட்டி, அதன்மூலம் சம்பாதிக்க தொடங்கினார். வட்டார மொழியில் அவர் தனக்கு கடிதம் போடுபவர்களை திட்டும் வீடியோ இன்று மீம் டெம்பிளேட் ஆகும் அளவுக்கு பேமஸ் ஆனது.
இதையடுத்து யூடியூப் மூலம் கிடைத்த புகழின் காரணமாக ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஜிபி முத்து. அந்நிகழ்ச்சியில் 2 வாரங்கள் இவர் செய்த அலப்பறையால் டிஆர்பி எகிறியது. இதையடுத்து தன் மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக்கூறி இரண்டே வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஜிபி முத்து.
இதையும் படியுங்கள்... பார்ட்டிக்கு போன இடத்தில் ஐ போனை அபேஸ் பண்ணிட்டாங்க... நண்பர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக ஷாலு ஷம்மு புகார்
அந்த 2 வார பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தின் காரணமாக ஜிபி முத்துவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஓமைகோஸ்ட் திரைப்படத்தில் சன்னி லியோன் உடன் நடித்திருந்த ஜிபி முத்து, அடுத்ததாக அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சீனில் மட்டும் வந்து கைதட்டல்களை வாங்கினார். இதையடுத்து தற்போது அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஜிபி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் தலைவருக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் திடீரென தலைசுற்றி மயக்கம் போட்டு விழுந்ததன் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்களாம். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் ஏராளமான ரசிகர்களும் வேண்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு காரணமானவர் முதல் சிலுக்கை பயன்படுத்திய நடிகர்கள் வரை.. லிஸ்ட் போட்டு சொன்ன பயில்வான்