பார்ட்டிக்கு போன இடத்தில் ஐ போனை அபேஸ் பண்ணிட்டாங்க... நண்பர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக ஷாலு ஷம்மு புகார்
நடிகை ஷாலு ஷம்மு பார்ட்டிக்கு போன போது தனது 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் தொலைந்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. இதையடுத்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, விஜய் சேதுபதியின் டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்த இவர் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
அதில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் மில்லியன் கணக்கில் பாலோவர்களை வைத்திருக்கும் ஷாலு ஷம்மு, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் போட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.
இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு காரணமானவர் முதல் சிலுக்கை பயன்படுத்திய நடிகர்கள் வரை.. லிஸ்ட் போட்டு சொன்ன பயில்வான்
அது என்னவென்றால், நடிகை ஷாலு ஷம்மு கடந்த ஞாயிறன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டிருகிறார். பார்ட்டி முடிந்ததும் சூளைமேட்டில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கினாராம். காலை எழுந்து பார்த்ததும் தன்னுடைய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐபோன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஷாலு ஷம்மு, இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை ஷாலு ஷம்மு அந்த ஐபோனை கடந்த ஜனவரி மாதம் தான் வாங்கினாராம். 2 லட்சம் மதிப்புள்ள அந்த போன் தொலைந்து போனதால் கடும் அப்செட் ஆன அவர் தன்னுடைய நண்பர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஷாலு ஷம்மு கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரின் செல்போனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை பெரும் தொகை கொடுத்து தட்டித்தூக்கிய முன்னணி நிறுவனம் - அதுவும் இத்தனை கோடியா?